districts

பூண்டி, கொளவாய் ஏரிகளில் படகு சவாரி

செங்கல்பட்டு,நவ.30- பூண்டி, செங்கல்பட்டு கொளவாய் ஏரி, திருப்பூர் ஆண்டிபாளையம் ஏரி பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. பூண்டி நீர் தேக்கத்துக்கு வருகை தரும் பறவைகளுக்கான பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய சுற்றுலா தளமாக மாற்றப்பட உள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான கொள வாய் ஏரி அமைந்துள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களை இங்கு ஏற்படுத்து வதன் மூலம் அதிக சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பாக அமையும். இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

;