districts

பி.எஸ்சி., பி.சிஏ பட்டதாரிகளுக்கு விஐடியில் தகவல் தொழில்நுட்ப பயிற்சி

வேலூர், செப். 7- பி.எஸ்சி., கணினி அறி வியல், தகவல் தொழில் நுட்பம், கணிதம் மற்றும் பி.சி.ஏ பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விஐடி பல்கலைக்கழக வளா கத்தில் கல்வி உதவித் தொகையுடன் தகவல் தொழில்நுட்ப துறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த வர்களுக்கு நல்ல ஊதி யத்துடன் வேலை வாய்ப்பை பெற்று தர முயற்சி கள் மேற்கொள்ளப்படும் என்று விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார். ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையும் இணைந்து வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு 4 மாதகால தக வல் தொழில்நுட்ப பயிற்சி யுடன், வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி திட்டத்தினை செயல் படுத்தி வருகிறது. அதற்கான பயிற்சி விஐடி பல்கலைக்கழக வளா கத்தில் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டில் பி.எஸ்சி., கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம் மற்றும் பி.சி.ஏ பாடப்பிரிவு களில் குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்களு டன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் 60 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாண வர்களுக்கு உதவித்தொகை யும், பயிற்சி முடித்த பிறகு நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பை  பெற வும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான மேலும் விவ ரங்கள் பெறவும், பயிற்சி யில் சேர பதிவு செய்ய வும் 8428408872 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். பயிற்சியில் சேர விருப்ப முள்ளவர்கள் தங்களுடைய  சுய விவரங்களை (பயோ-டேட்டாவை) info.uhet@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி யில் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 20.09.2022. பதிவு செய்தவர் கள் மட்டுமே திறனறித் தேர்வு மற்றும் நேர்காண லில் பங்கேற்க அனுமதிக்கப் படுவார்கள்.

;