districts

img

ஒரே நாளில் 10 மருத்துவமனைகளில் ஆய்வு

வேலூர், அக்.5- வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 அரசு மருத்து வமனைகளில் அமைச்சர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையம், மேல்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், திருவலம் ஆரம்ப சுகாதார நிலையம், காட்பாடியில் 60 படுக்கைகள் கொண்ட தாலுகா அளவிலான அரசு மருத்துவமனை கட்டும் பணி, பள்ளிகுப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையம், சேனூர் ஆரம்ப சுகாதார நிலை யம், கழிஞ்சூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை ஆகிய 10 மருத்துவ மனைகளில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விரி வாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது செய்தி யாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “பொன்னை ஒரு பெரிய ஊராட்சி. இவற்றை சுற்றி 20 கிராமங்கள் உள்ளன. ஆகவே, பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை நம்பித்தான் அனைத்து பொதுமக்களும் உள்ளனர். எனவே, இது போன்ற மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காகவும், தரம் உயர்த்துவதற்காகவும், அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சரும், நானும் இன்று விரிவாக ஆய்வு மேற்கொண்டோம்” என்றார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிர மணியன் செய்தியாளர்களி டம் கூறுகையில், “ராணி பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட மருத்துவமனைகள் ஆய்வு செய்தோம்” என்றார். டிஜிட்டல் எக்ஸ்ரே, பல் மருத்துவத்திற்கு தேவையான ஒரு மருத்துவர் போன்ற நியமனங்களை உடனடியாக அமைத்து தகுதி வாய்ந்த மருத்துவமனையாக பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும். பொன்னை மருத்துவமனை யில் பாழடைந்துள்ள கட்டி டங்களை இடித்து விட்டு வரும் நிதியாண்டில் புதிய கட்டிடங்களை கட்டு வதற்கான திட்ட மதிப்பீடு களை தயாரித்து அர சுக்கு அனுப்ப தெரி விக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

;