districts

img

இபிஎப் ஓய்வூதியத்தை ரூ.6ஆயிரமாக உயர்த்துக சிஐடியு வேலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

வேலூர் செப் 18 - சிஐடியு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட 13வது மாநாடு  வேலூரில் ஏ.பாபு நினைவரங்கத்தில் ஞாயிறன்று (செப்.18) நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கட்டுமான சங்க கவுரவத் தலைவர் டி.சுப்பிரமணி செங்கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் சி.ஞானசேகரன் வரவேற்று பேசினார். எம்.கோவிந்தராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார்  மாநாட்டை தொடங்கி வைத்துப்பேசினார். வேலை அறிக்கையை மாவட்டச் செய லாளர் எஸ்.பரசுராமனும் பொருளாளர் ஏ.பழனியப்பன் வரவு-செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜி.நரசிம்மன் வாழ்த்தி பேசினார். மாநில துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார். டி.முரளி நன்றி கூறினார். இபிஎப் பெறும் பீடித்தொழிலாளர்க ளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வழங்க வேண்டும் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் குடியாத்தம் பகுதி யில் ஜவுளிபூங்கா அமைக்க வேண்டும். மக்க ளின் நோய் தீர்ந்து உயிரை பாதுகாக்கும் மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் மீது 12விழுக்காடு முதல்18 விழுக்காடு வரை விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும், டேனரி தொழி லாளர்களுக்கு அரசு அறிவித்த ஒப்பந்த ஊதியத்தை வழங்க தமிழக அரசு தலை யீடு செய்ய வேண்டும். அங்கன்வாடி ஊழி யர்களை அரசு ஊழியர்களாக்கி குறைந்த பட்ச ஊதியமாக ரூ.21,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்டக்குழுக்கள் பிரிப்பு
மாநாட்டில் வேலூர் மாவட்டக்குழு வேலூர்- திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரு மாவட்டக்குழுக்களாக பிரிக்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள்  
40 பேர் கொண்ட வேலூர் - திருப்பத்தூர் மாவட்டக்குழுவிற்கு தலை வராக டி.முரளி, செயலாளராக எஸ்.பர சுராமன் , பொருளாளராக எம்.கோவிந்த ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 32பேர் கொண்ட ராணிப்பேட்டை மாவட்டக்குழுவிற்கு தலைவராக ஆர்.வெங்கடேசன், செயலாளராக ஏ.தவராஜ், பொருளாளராக என்.ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;