districts

img

4 மாவட்ட பெண் காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்

வேலூர், மார்ச் 13 வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் 4 மாவட்ட பெண்  காவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் திங்கட்கிழமை (மார்ச் 14)  தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காவலர்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அப்போது போலீசாருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்து தேர்வு நடந்தது.கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுசெய்யப்பட்ட போலீசாருக்கு பயிற்சி வகுப்பு நடைபெற வில்லை. இந்த நிலையில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 277 பெண் போலீசாருக்கு மார்ச் 14 அன்று  (திங்கட்கிழமை) வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. தேர்ச்சி பெற்ற பெண் காவலர்கள் சனிக்கிழமை காலை முதலே காவலர் பயிற்சி வகுப்பிற்கு தங்கள் உடமைகளுடன் பெற்றோர்களை அழைத்து வந்தனர். பயிற்சி வகுப்பிற்கு வந்த பெண் போலீசாருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா நெகட்டிவ் சான்று இல்லாமல் வந்தவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப் பட்டது. இதையடுத்து 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தனித்தனியாக அமரவைத்து சான்றிதழ், ஆதார் எண் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டது.  இந்த முகாமை திங்களன்று (மார்ச் 13)  காலை 10 மணிக்கு பயிற்சி வகுப்பை வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா தொடங்கி வைக்க உள்ளதாக காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் அசோக் குமார் தெரிவித்தார்.

;