வேலூர், மார்ச் 26 - வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் துரைவர்மா (49). அவருடைய மகள் மோகனபிரீத்தி (13). சின்ன அல்லாபுரம் சாலையில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு திரு வண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலை யத்தில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம் வாங்கி உள்ளார். அதற்கு வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். அந்த வண்டியிலிருந்த பேட்டரியில் தீ விபத்து ஏற்பட்டு முழுவதுமாக எரியத் துவங்கியது. அதன் அருகில் நிற்க வைக்கப்பட்டு இருந்த மற்றொரு பெட்ரோல் இருசக்கர வாகன மும் முழுவதுமாக எரிந்து நாசமானது. மேலும், அந்த தீ வீடு முழுவதும் பரவி புகைமூட்டமானதால் உறங்கிக் கொண்டி ருந்த துரைராஜ் அவரது மகள் மோகன பிரீத்தி இருவரும் மூச்சு திணறி உயிரிழந்த னர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் துறையினர் தீயை அணைத்து, கருகிய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.