districts

img

இஎஸ்ஐ, பிஎஃப் அமல்படுத்த வேண்டும் வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் மாநாடு வலியுறுத்தல்

வேலூர், மே 25- இஎஸ்ஐ, பிஎஃப் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மாநாடு வலியுறுத்தியுள்ளது. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட 7ஆவது மாநாடு தோழர்கள் ஜெயபால், மூர்த்தி நினை வரங்கில் நடைபெற்றது. சங்கக் கொடியை பரதராமி நந்தகுமார் ஏற்றினார். மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் டி.முரளி வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.ராமு வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டத் தலை வர் எம்.பி.ராமச்சந்திரன், செயலாளர் எஸ்.பரசுராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு ஆட்டோ சம்மேளன மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.சந்திரசேகரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் ஜெ.கிருபாகரன் வரவேற்றார். வெங்கடேச பெருமாள் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக கே.ராஜேந்திரன், செயலாளராக டி.முரளி, பொருளாளராக எம்.ராமு உள்ளிட்ட 15 பேர் மாவட்ட தேர்வு செய்யப்பட்டனர். ஆட்டோ தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை மானிய விலையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும், கொரோனா வைரஸ் பொது முடக்கத்தின்போது வங்கி கடன்களை செலுத்தத் தவறிய தொழிலாளர்களுக்கு வட்டியை தள்ளுவடி செய்ய வேண்டும், மோட்டார் வாகன புதிய சட்டத்தை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

;