districts

img

வேளாண்மையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தல்

வேலூர், ஜன. 22- வேலூர் மாவட்டம் அரசு  ஏந்திர கலப்பை பணிமனை யில் வேளாண்மை உழவர்  நலத்துறையின் சார்பில் மாநில விரிவாக்க திட்டங்க ளுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்  பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிர பலப்படுத்துவதற்கான கண்காட்சியை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகை யில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய பயிர் கள் மற்றும் பாரம்பரிய விவ சாயம் தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. அதில் நம்முடைய பகுதியில்  விளையக்கூடிய பல்வேறு வகையான பயிர்கள் மற்றும் நம்முடைய பகுதியில் என்னென்ன வகையான முறைகளை கையாண்டு நாம் வேளாண்மை செய்து  வருகிறோம் என்பது குறித்தும், அந்த முறை களுக்கு தேவையான கருவி களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் பெரு மக்கள் அரிய வகை பயிர் களை கொண்டு வந்து  காட்சிப்படுத்தி உள்ளனர். நம்முடைய வாழ்க்கை முறை என்பது தட்பவெட்பம் போன்று பல்வேறு பிரிவு களால் அமைக்கப்பட்டுள் ளது. நம்முடைய பகுதியை  பொறுத்தவரை வெப்ப  மண்டலத்தில் அமைந்திருக் கக் கூடிய பகுதி. இந்த  பகுதியில் கோடைக்காலத் தில் உச்சபட்ச வெப்பம் 40  டிகிரி செல்சியஸ் ஆகும்.  குளிர்காலத்தில் குறைந்த பட்ச வெப்பம் 14 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. தற்போது நாம் குளிர் காலத்தின் மையப் பகுதி யில் உள்ளோம். இந்த பனிக் காலத்தில் நோய் தாக்குதல்  என்பது சற்று குறைவாகவே இருக்கும். தை மாதம் என்பது நெல், சோளம், சிறு தானியங்களை அறுவடை செய்ய உகந்த காலம். வேளாண்மை என்பது இன்றியமையாத ஒரு தொழில் இந்த தொழிலை நாம் வாழ்க்கை முறையாக பின்பற்றி அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

;