districts

img

பீடிக்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரியா? தொழிலாளர்கள் ஆவேசம்

வேலூர், நவ. 30 - பீடி மீது விதிக்கப்பட்டுள்ள 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஓய்வு பெற்ற பீடி தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும், ரிங் லேபிள் தொழிலாளர்களுக்கு ஆயிரம் பீடி சுற்ற ரூ.24.80 கூலி வழங்க வேண்டும் பிஎஃப் உள்ளிட்ட சட்ட சலுகைகள் அனைத்தையும் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.காத்தவராயன் தலைமை வகித்தார். சம்மேளனத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், பீடி சங்க நிர்வாகிகள் வி.நாகேந்திரன், எம்.காசி, சி.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;