districts

img

ஆளுநர் ஆர்.என்.ரவி, திருப்பதி நாராயணனுக்கு எதிராக விருதுநகரில் போராட்டம்

விருதுநகர், பிப்.24- மாமேதை காரல் மார்க்சின் தத்துவம் குறித்து தரம் தாழ்ந்து  பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைக் கண்டித்தும், ரயில் பயணியை மிரட்டிய பாஜக தலை வர் நாராயணன் திருப்பதியைக் கண்டித் தும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர் செயலாளர் எல்.முருகன் தலைமை வகித்தார். மூத்த தோழர் எஸ்.பாலசுப்பிர மணியன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, ஏ.குரு சாமி, எம்.தாமஸ், எம்.முத்துக்குமார், கே. முருகன், எஸ்.லட்சுமி, மாவட்டகுழு, நகர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத் திற்கு எதிராகச் செயல்படும், நீட் தேர்வு தடை மசோதாவை கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளி யேற வேண்டும். ஒன்றிய அரசு அவரைத் திரும்பப் பெற வேண்டும். ரயில் பயணியை மிரட்டிய பாஜகவின் நாராயணன் திருப்பதி யைக் கண்டித்தும், அவருக்குத் துணை போன ரயில்வே காவல்துறையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

;