districts

மதுரை முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது

சென்னை,மார்ச் 4- அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கரின் உதவியாளர் ரவி, அரசு வேலை வாங்கித் தருவதாக ராணிப் பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணான முத்துலட்சுமி தலைமை செயலகத்தில் புகார் அளித்தார். அதில், விஜயபாஸ்கரின் உதவியாளரான ரவி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி அரசு வேலையை  அவர் வாங்கி தரவில்லை. இதனால் நான், கொடுத்த பணத்தை கேட்டேன். அப்போது அவர் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே என்னை ஏமாற்றி மிரட்டல் விடுக்கும் ரவி மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த ஆணையர்சங்கர் ஜிவால் உத்தர விட்டார்.  இதைத் தொடர்ந்து, சென்னை ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவின் வேலை மோசடி தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் உதவியாளரான ரவி, முத்துலட்சுமியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடு பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதை யடுத்து ரவியை கைது செய்தனர். ஓட்டு நர் விஜய் என்பவரும் கைது செய்யப்பட் டுள்ளார். கைதான ரவி தற்போது தலைமை செயலகத்தில் ஆதி திராவிட நலத்துறை யில் உதவி பிரிவு அலுவலராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில்தான் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


போலி டாக்டர் பட்டம் விவகாரம்: முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை,மார்ச் 4- போலியாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் இயக்குநரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பின் சார்பில் பிரபலங் களுக்கு போலியான கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.  அண்ணா பல்கலைக்கழக பெயரை தவறாக பயன்படுத்தியதால் துணை வேந்தர் அளித்த புகாரின் பேரில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்கு நர் ராஜூ ஹரிசை காவல்துறையினர் தேடிவந்தனர். இதையடுத்து தலைமறைவான அவர் கைதுக்கு பயந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


சூதாட்டத்தில்  ரூ.20 லட்சத்தை இழந்தவர் தற்கொலை

சென்னை,மார்ச் 5- ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் 20  லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சென்னை மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மருத்துவ பிரதிநிதி வினோத் குமார் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த வினோத்குமார் திருமண மானவர். அவருக்கு இரண்டு குழந்தை கள் உள்ளன. தற்கொலைக்கு முன் அவர் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். அதனை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.


 

;