districts

மதுரை முக்கிய செய்திகள்

பரமக்குடியில்  வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், டிச.6- இளைஞர்களின் அரசு வேலையை பறிக்கும் அர சாணைகள் 115, 152-ஐ திரும்பப்பெற வேண்டும். நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 24 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடு முறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் ரஞ்சித்  தலைமை தாங்கினார். துவக்கி வைத்து மாவட்டத் தலை வர் மாரிகுமார் பேசினார். மாவட்ட செயலாளர் இ.க. தட்சிணாமூர்த்தி,சிஐடியு மாவட்டத் துணைச்செயலாளர் ராஜா ஆகியோர் விளக்கிப் பேசினர். தாலுகாக்குழு உறுப்பினர்கள்,சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகரில் வட்டியில்லா பயிர்க்கடன்  ரூ.200 கோடி வழங்க இலக்கு  மாவட்ட ஆட்சியர் தகவல்

விருதுநகர், டிச.6- விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவ சாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கிட ரூ.200  கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டிதெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் ரூ.200  கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்  பட்டுள்ளது. எனவே, கடன் தேவையுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர்  அடங்கல், 10(1)சிட்டா, குடும்ப அட்டை நகல் மற்றும்  பாஸ்போர்ட் அளவு உள்ள 2 புகைப்படம் ஆகியவற்று டன் அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர்க்கடன்  கள் பெறலாம். இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயி கள் உரிய பங்குத்தொகை செலுத்தி புதிய உறுப்பி னர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம் என்று தெரி வித்துள்ளார்.

வேளாண் கல்லூரி மண்டல விளையாட்டு போட்டி  மதுரை அரசு வேளாண் கல்லூரி முதலிடம்

தேனி, டிச.6- மண்டல அளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி களுக்கு இடையே நடைபெற்ற விளை யாட்டுப் போட்டிகளில் மதுரை தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி அணி முதலி டத்தையும், பெரியகுளம் அரசு தோட்டக் கலை கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தது . தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ கத்திற்கு உட்பட்ட கல்லூரிகளை கோவை,  தஞ்சாவூர், பெரியகுளம், கிள்ளிகுளம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்  டல அளவிலான விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்றது. இதில் பி பிரிவு மண்டலத்தில் தேனி, மதுரை, கரூர், திண்டுக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனி யார் வேளாண் கல்லூரிகளைச் சேர்ந்த 12 உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் 1200 மாணவ மாணவியர் பங்கேற்றனர். இந்த விளை யாட்டு போட்டிகளானது பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விளை யாட்டு மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது. இறுதி நாளான டிசம்பர் 6 அன்று விளை யாட்டுப் போட்டிகள் முடிவுற்ற நிலையில், வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவி யருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்  கீதா லட்சுமி பங்கேற்று வெற்றி பெற்ற மாண வர் மாணவியருக்கு பதக்கம் மற்றும்  பாராட்டு சான்றிதழ்களை வழங்கி,உரை யாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை கல்லூரி- ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜாங்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர். மண்டல அளவில் ஐந்து நாட்கள் நடை பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மதுரை தமிழ்நாடு அரசு வேளாண் பல்க லைக்கழக கல்லூரி அணி 173 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தையும் 92 புள்ளிகளை பெற்ற பெரியகுளம் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இரண்டாம் இடத்தையும் பிடித்  தது.

நத்தம் அருகே தனியார் கல்லூரி  வாகனம் மோதி தொழிலாளி பலி

நத்தம், டிச.6- திண்டுக்கல்லை சேர்ந்தவர் பாலாஜி (39). இவர் நத்தம் அருகே பாதசிறுகுடி பகுதியில் உள்ள தனியார் குவாரி யில் வேலை பார்த்து வந்தார்.  இவர் கடந்த 23-ம் தேதி வேலை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். குமரபட்டிபுதூர் விலக்கு பகுதியில் வந்தபோது துவ ரங்குறிச்சியில் இருந்து வந்த தனியார் கல்லூரி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவர் பலத்த  காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக  மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி உயி ரிழந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

;