districts

திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு ரூ.25 லட்சம் வரை சிறப்பு உதவித்தொகை

நாகர்கோவில், டிச. 1- தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தால் திறன் மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு டிசம்பர் 15 வரை விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  மாநில, தேசிய மற்றும் சர்வதேச அள விலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது. விண்ணப்பத்தாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.   தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sportspersons Scheme- ELITE)  வழங்கப்படும். மேலும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வ தற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme - MIMS),  வெற்றியாளர் கள் மேம்பாட்டுத் திட்டம் (Champio ns Development Scheme - CDS) என மூன்று வகையில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.  

தகுதியான விண்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டகுழு  மூலம் ஆய்வு செய் யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப் பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதா ரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படு வர். அதிகபட்சம் அவர்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளு க்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப் படும். இத்திட்டங்களில் தேர்ந்தெ டுக்கப்படும் விளளயாட்டு வீரர், வீராங்கனைகள், அவர் தம் காப்பா ளர் தங்கள் முழுமையான விவரங் கள் மற்றும் 2 ஆண்டுகால இலக்கு கள் (Deliverables and outcome for two years) குறித்த விவரங்களு டன் எஸ்டிஏடிஉடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். பன் னாட்டு அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்கள் வெல்ப வர்களுக்கு கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்படும். ஆனால் அதனை உரிமை கோர இயலாது. இத்திட் டங்களில் உதவித்தொகை பெறுப வர்கள், தாம் பங்கேற்கும் அனை த்துப் போட்டிகளிலும், போட்டி விதி முறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் எஸ்டிஏடியை- தங்கள் ஸ்பான்சராக வெளிப்படுத்தும் வகையில் சீருடை அணிய வேண்டும்.

வழங்கப்படும்  உதவித்தொகை

தேர்ந்தெடுக்கப்படும் வீரர்/ வீராங்கனைகளுக்கு அதிகபட்ச மாக இரண்டு ஆண்டுகள் வரை  அவர்கள் விளையாட்டு பயிற்சிக ளுக்கான செலவினங்களை திரும்ப வழங்கிடும் வகையில் உத வித்தொகை வழங்கப்படும். திட் டத்தில் பயன்பெறும் வீரர் / வீராங்க னைகள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பயிற்சி விவரங்கள், போட்டிகளில் பங்கேற்ற விவரங் கள், காயம் மற்றும் சிகிச்சை விவரங்கள் (ஏதும்இருப்பின்) உள்ளிட்டவற்றை இணைய வழி யில் எஸ்டிஏடி (SDAT) இணைய தளத்தில் அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள தனி பக்கத்தில் பதிவேற்ற வேண்டும். உதவித் தொகை காலத்தில் மூன்று மாதங்கள் வரை (தொடர்ந்து/ தனித்தனியாக) விவரங்களை இணைய வழியில் பதிவேற்றாத வர்கள், ஆறு மாதங்கள் வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கா தவர்கள்,

ஒர் ஆண்டு வரை தேசிய அளவிலான போட்டி அல்லது அதற்கு மேலான போட்டிகளில் முதல் 8 இடங்களுக்குள் பெற இய லாதவர்கள், இரண்டு ஆண்டுகள் வரை எவ்வித சர்வதேச பதக்கமும் பெறாதவர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். எலைட் பிரிவில் ரு.25 லட்சம், எம்ஐஎம்எஸ் பிரிவில் ரூ.10 லட்சம், சிடிஎஸ் பிரிவில் ரூ.லட்சம் வரை வழங்கப்படும்.  இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்/ வீராங்கனை கள் தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் இணைய தளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே அஞ்சல் வழி யில்/நேரடியாக விண்ணப்பத்தி ருந்தாலும், மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண் டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;