districts

img

உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டங்கள்

மதுரை, மார்ச் 22-   உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சி யர் எஸ்.அனிஸ் சேகர் தலைமை யில் மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலாத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் புதனன்று  நடை ெற்றது.  கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்சு நிகம், ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தண்ணீரை பாது காப்பது தொடர்பான கேள்விக்கு சரியாக பதிலளித்த ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவருக்கு, மாவட்ட ஆட்சியர் புத்தகம் வழங்கினார். திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி தலை மையிலும், முன்னிலைக்கோட்டை யில் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணியம்மாள் தலைமையி லும் கலிக்கம்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வ குமார் தலைமையிலும், அம்பாத் துறையில் ஊராட்சி மன்ற தலை வர் சேகர் தலைமையிலும், காந்திகிராமத்தில் தலைவர் தங்க முனியம்மாள் தலைமையிலும், தொப்பம்பட்டியில் தலைவர் கருப் பையா தலைமையிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதேபோல் 23 கிராம ஊராட்சிக ளிலும் கிராம சபை கூட்டங்கள் நடை பெற்றன. இதில், ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை யான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்ட பாணி, திட்ட இயக்குநர்  தெய் வேந்திரன், நேர்முக உதவியா ளர்(விவசாயம்) நாச்சியார், வட்டார வளர்ச்சி அலுவலர் காஜா மைதீன் பந்தே நவாஸ், வட்டாட்சி யர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தி ற்கு பிள்ளையார் குளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற எழுத்தர் தங்கப்பாண்டியன், ஊரக வளர்ச்சி துறை மேற் பார்வையாளர் வசந்தி, வேளா ண்மை துறை அதிகாரி சரவணன்  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.  திருவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார் நத்தத்தில் நடை பெற்ற கூட்டத்தில் சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஆணையாளர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் காசி என்ற கருப்பையா மற்றும் ஊராட்சி செயலர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். 

தேனி

தேனி மாவட்டம் உத்தமபாளை யம் ஊராட்சி ஒன்றியம், ஆனை மலையான்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத் தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா கலந்து கொண்டார்.  கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் பி.மதுமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் இன்பென்ட் பனிமய ஜெப்ரின், துணைத் தலைவர் கெ.மூக்கம்மாள், ஊராட்சி மன்றத் தலைவர் எம்.மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், 2022-23-ஆண்டிற்கான சமூக நலனை போற்றக்கூடிய மற்றும் தீண்டாமையை கடை பிடிக்காத கிராமாக ஆனைமலை ான்பட்டி ஊராட்சி தேர்வு செய் யப்பட்டு, ரூ.10 லட்சத்திற்கான பரிசுத்தொகை வழங்கப்பட வுள்ளதாக ஆட்சியர் தெரி வித்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவில் ஊராட்சியில் நடை பெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் எ.ஜோஸ்பின் மேரி தலைமை வகித்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.இரா.சிவராமன், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கோ.ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

;