districts

மேலூரில் தற்காலிக பேருந்து நிலையம் வர்த்தகர்-மக்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

மதுரை, பிப்.27-  மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கர்னல் பென்னி குவிக் பேருந்து நிலையம், 7.42 கோடி மதிப்பீட்டில் நவீன  வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட  உள்ளது. இதற்கான  பணி சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அழகர்  கோவில் சாலை, சந்தைப்பேட்டை, திருவாதவூர் சாலை  மற்றும் சிவகங்கை சாலைகளில் வரும் பேருந்துகள் பேருந்து நிலையம் வராமல், அவ்வழியே அந்தந்த சாலை களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிறுத்தங் களுக்கு மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.   தற்காலிகப் பேருந்து நிறுத்தம், தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் முதல் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், பள்ளி மற்றும் வேலைகளுக்குச் செல்வோர் பாதிக்கப்படுவர். வியாபாரிகள் வேலையின்றி பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் வியாபாரிகளும்-பொதுமக்களும் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மேலூர் அனைத்து வியாபாரிகள் வர்த்தக சங்கம் சார்பில் மேலூர் நகராட்சி ஆணையாளர்  ஆறுமுகம், நகராட்சி பொறியாளர் பட்டுராஜாவை சந்தித்து வியாபாரிகள்-பொதுமக்கள் பாதிக்காத வகையில், அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிலையம் வரை சென்று திரும்ப மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.

;