தமிழக இளைஞர் நலன்- விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் மாணவர்களின் விளையாட்டுக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார். கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.