மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட முன்னாள் செயலாளர் டி.வெங்கடேசன் -தலைமை ஆசிரியை வி.கவிதா ஆகியோரின் மகள் மருத்துவர் வி.ராதித்யா -மருத்துவர் கே.நித்தின் ஆகியோர் திருமணம் ஆண்டிபட்டியில் நடைபெற்றது .கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர் .விஜயராஜன் ,மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன் ,மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .விழாவில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி ,மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர் ,மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ,மூத்த தலைவர் கேர்.ராஜப்பன்,ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .