districts

img

கிறிஸ்தவ இறை பணியாளர்களை நேரில் சந்தித்து சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்

மதுரை, ஜூலை 28-  மதுரை செல்லூர் பகுதி யில் கடந்த ஞாயிறன்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள்,  பாஸ்டர் மைக்கேல் மற் றும் அவரது மனைவி ஆ கியோர் குழந்தையை கடத்திச் சென்றதாக பொய்யான புகா ரினை காவல்துறையினரிடம் கூறியதால் அவர்கள் கைது  செய்யப்பட்டனர். இது பொய்  யான புகார் என்று குழந்தை யின் பெற்றோர்கள் கூறினர். இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தர வின் பேரில் கைது செய்யப்  பட்டவர்களை விடுவித்தனர்.  சிறுபான்மை மக்கள் மீது  இந்து மதவெறி அமைப்பு கள் தொடர்ந்து இது போன்ற பொய்யான புகார்களை கூறு வதை சிபிஎம் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.மேலும் பாதிக்கப்பட்ட பாஸ்டர் மைக்கேல் மற்றும் அவரது குடும்பத்தினரை சிபிஎம் தலைவர்கள் வியாழனன்று  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயற்குழு உறுப்பினர்  எஸ்.கண்ணன், மாவட்டச்  செயலாளர் மா.கணேசன்,  துணை மேயர் டி. நாகராஜன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு, மாவட்டக்குழு உறுப்  பினர் பி.ராதா, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் கே.அலாவுதீன் மற்றும் சிபிஎம் ஜெயமூர்த்தி, ஜாஹீர், சங்கர் ஆகியோர் நேரில் சென்று நடந்த விபரங்கள் குறித்து கேட்டறிந்து, ஆறு தல் கூறினார்.