districts

img

பழைய பென்சன் திட்டம் கோரி பல்கலை., ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 11-  திமுக தேர்தல் வாக்குறுதியில் அறி வித்துள்ளபடி அரசு ஊழியர் மற்றும் ஆசிரி யர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியு றுத்தி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (மூட்டா) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழ கப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (மூட்டா) சார்பில் முதலாம் மற்றும் இரண்  டாம் மண்டலங்களின் அனைத்து கல்லூரி வாயில் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் முனை வர் ஏ.டி.செந்தாமரைகண்ணன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி அலுவ லகப் பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.