districts

img

திருவரம்பு-நாகக்கோடு சாலை சீரமைப்பு பணி 3 வாரங்களில் துவக்க அதிகாரிகள் ஒப்புதல்

நாகர்கோவில், செப்.26- திருவட்டாறு அருகில் உள்ள திருவரம்பு நாகக் கோடு சாலையை அகலப் படுத்தி செப்பனிடும் பணி 3  வாரங்களுக்குள் துவக்கப் படும் என நெடுஞ்சாலைத் துறையினர்  உறுதியளித்த தால் சிபிஎம் நடத்தவிருந்த மறியல் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட் டம் திருவட்டாறு அருகில் உள்ள திருவரம்பு முதல் நாகக்கோடு வரையிலான சாலை மிக மோசமாக சீர் குலைந்துள்ளது. குலசேக ரத்திலிருந்து அருமனை செல்லும் இந்த முக்கிய சாலையில் அரசுப்பேருந்து கள் உட்பட ஆயிரக்கணக் கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மீகவும் சீர்குலைந்த நிலையில் பொதுமக்கள்-மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பி னரும் பாதிக்கப்பட்டு வந்த னர். பொதுமக்களுடன் இணைந்து இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்க ளை நடத்தி வந்துள்ளது. இதன் விளைவாக திரு வரம்பு முதல் நாகக்கோடு வரையிலான சாலையை சீரமைக்க சூ.3 கோடியே 15 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனா லும் பணி துவக்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வந்தது.  

இந்நிலையில் செப்.26 திங்களன்று திருவரம்பு தபால் நிலையம் முன்பு மறியல் செய்ய சிபிஎம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி திருவட்டாறு வட்டார செயலாளர் ஆர்.வில்சன் தலைமையில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், குலசேகரம் வட்டார செயலா ளர் பி.விஸ்வாம்பரன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் என்.ரெஜீஸ் குமார், ஜி.சகாய ஆன்டனி, ஆர்.ரவி மற்றும் சிபிஎம் கிளை செய லாளர்கள், பொதுமக்கள் திரண்டனர். அப்போது காவல்துறை யினரும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், அடுத்து வரும் 15 நாட்க ளுக்குள் கி.மீ.0/0 முதல் 4.5 வரையிலான வேலைக்கு இந்த வாரம் கையெழுத்தாகி விடும் எனவும், அதிலிருந்து 15 நாட்களுக்குள் இந்த சாலை அகலப்படுத்தி கருந் தளம் அமைக்கப்படும் என உதவி கோட்டப் பெறியாளர் எழுத்துபூர்வமாக வட்டார செயலாளருக்கு உறுதிய ளித்தார். அதைத் தொடர்ந்து  போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக கடசி தலைவர் கள் அறிவித்தனர். போராட்டத் துக்கு வந்தவர்கள் கலைந்து சென்றனனர். 

;