நாகர்கோவில், டிச. 4- கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவில் பூப்போல் நீர் சொரிவது சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தி வெகுவாக கவர்ந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராள மான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றை கண்டுகளிக்கலாம். ஆனால், உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் அளிப்ப தாக திற்பரப்பு அருவி உள்ளது. 50 அடி உயரத்திலிருந்து மல்லிகைப்பூச்ச ரம்போல் இதமாக சொரியும் மாசற்ற தண்ணீரில் குளிப்பது இயற்கையான ஒரு மசாஜ் அனுபவம். நவம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்கள் கன மழை பெய்து அதிக அளவில் தண்ணீர் அருவியில் கொட்டியதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த பத்து நாட்களாக மழை குறைந்துள் ளதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக் கப்படுகிறார்கள். வழக்கமான சுற்றுலா பயணிகளுடன் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வருகை யும் அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவி களைகட்டியுள்ளது. குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் அருவில் குளித்து மகிழ்வதோடு குழந்தைகள் நீச்சல் குளத்திலும் கும்மாளமடிக்கின்றன. அது போல் அருவின் மேற்பகுதில் கோதை யாற்றின் இருபுறமும் இயற்கை காட்சிக ளை ரசித்தபடி படகு சவாரியும் செய்கிறார் கள். சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவிக்கு இரு தினங்களிலும் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்தனர்.