districts

மதுரை முக்கிய செய்திகள்

சப்வே அமைக்கும்வரை ரயில்வே கேட் பூட்டப்படாது  சிவகங்கை ஆட்சியர் உறுதி

சிவகங்கை செப்30- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பைபாஸ் ரயில்வே கேட்டை பூட்டாக்கூடாது என்று போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் தெரி வித்தனர். மானாமதுரை-மதுரை செல்கிற ரயில்வே பாதையில் மானாமதுரை பைபாஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டை பூட்டிவிட ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எதிர்ப்பு காரணமாக கேட்டை பூட்டுவதை செயல்படுத்தவில்லை.மீண்டும் ரயில்வே கேட்டை பூட்டுவோம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பாக திமுக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் ஒன்றிய செய லாளர் ஆண்டி முன்னிலையில் அனைத்துக்கட்சிகளின் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக நகர் செயலா ளர் பொன்னுசாமி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதாஅண்ணாத்துரை, சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா ஆகியோர் பங்கேற்றனர்.  பின்ர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்தை நடத்தினார்.சப்வே அமைக்கும்வரை கேட் பூட்டப்படாது என மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியளித்தார். 

வீட்டுமனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு 

சிவகங்கை செப்.30- சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் தாலுகா மறவமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்க ளில் இருந்து வீட்டுமனை இல்லாத 15 நபர்களுக்கு வீட்டு  மனை இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி  தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்புசாமி, மணியம்மா, காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் தென்னரசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மெய்யப்பன், பொன்னுச் சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சீனிவாசன், முத்துக் கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி மேலும் உயர்கிறது

மும்பை, செப்.30- ரிசர்வ் வங்கி, நாட்டின் வணிக வங்கி களுக்கு வழங்கும் குறுகியக் காலக் கடன் களுக்கான வட்டியின் விகிதத்தை (Repo Rate), வெள்ளிக்கிழமையன்று மேலும் 50 புள்ளிகள் உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்மூலம், ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவிகிதமாக உயர்ந்துள்ளதால், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் களுக்கான இஎம்ஐ தொகை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. 2022 மே முதல் செப்டம்பர் வரையி லான 5 மாதங்களில் 4-ஆவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக 4 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்த ரெப்போ விகிதம் தற்போது மே முதல் செப்டம்பர் வரை யிலான காலத்திற்குள் மட்டும் 1.90 சத விகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய 2019  ஆகஸ்டில், வட்டி விகிதம் 5.40 சதவிகித மாக இருந்தது. தற்போது அதை விட அதிக மாக ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்ததை அடுத்து, வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி  விகிதம், இஎம்ஐ தொகை, தவணைக் காலம் ஆகியவையும் அதிகரிக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ரெப்போ விகிதம் 4.90 சதவிகிதமாக உயர்த்தப்பட்ட போதே, நாட்டின் முக்கியமான வங்கிகள் பலவும் ரெப்போவுடன் தொடர்புடைய (Repo  Linked Lending Rate -RLLR)  கடனுக் கான வட்டியை உயர்த்தின. ஜூன், ஆகஸ்ட்  மாதங்களிலும் அடுத்தடுத்து வட்டி விகிதங்களை உயர்த்தின. தற்போது செப்டம்பர் 30-ஆம் தேதியன்று நான்காவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால், இது மக்கள் மீது கூடுதல் சுமையாக மாறவுள்ளது.

100 நாள் வேலையில் ஒருங்கிணைப்பாளர் பணி இராமநாதபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

இராமநாதபுரம், செப்.30-  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலை வர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது:  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யில் 08.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் இறந்த அவர்தம் வாரிசுதாரர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித் திட்டத்தின் கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கி ணைப்பாளர்களாக பணிபுரிய 13.06.2022 முதல் 18.06.2022 வரை விருப்ப விண்ணப் பங்கள் பெறப்பட்டு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் .  உச்சநீதிமன்ற உத்தரவின்படி விருப்ப விண்ணப்பங்கள் அளித்து பணியில் சேராத முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுதார்கள் பணியில் சேர 12.10.2022 வரை காலநீட்டிப்பு வழங்கப் படுகிறது . எனவே, விருப்ப விண்ணப்பங்கள் அளித்த தகுதியுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் அவர்களது வாரிசு தார்கள் மற்றும் 08.11.2011 அன்று பணி யிழந்து இதுவரை விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்காத தகுதியானவர்கள் பணியில் சேர விரும்பம் இருப்பின் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்  ( கி.ஊ ) யை தொடர்பு கொண்டு பணியில் சேர தெரிவிக்கப்படுகிறது.

புதுராமச்சந்திராபுரத்தில் சாக்கடை வடிகால்களை தூர்வாரக் கோரிக்கை 

கடமலைக்குண்டு, செப்.30- தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே புதுராமச்சந்திராபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராமத்தில் அனைத்து தெருக்களும் சாக்கடை வடிகால் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக புதுராமச்சந்திராபுரம் கிராமத்தில் சாக்கடை வடிகால் தூர்வாரப்படவில்லை. இதனால் சாக்கடை வடிகாலில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் காரண மாக வடிகால்களில் கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி காணப்படுகிறது. இதனால் புதுராமச்சந்திராபுரம் கிரா மத்தில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. தவிர சாக்கடை கழிவு நீரில் இருந்து கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் இரவு நேரங்களில் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்ற னர். இதேபோல மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் வீடுகளுக்குள் செல்கிறது. சம்பந்தப்பட்ட கண்டமனூர் ஊராட்சி நிர்வாகத்தினர் புதுராமச்சந்திராபுரம் கிராமத்தில் சாக்கடை வடி கால்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

;