மதுரை, ஜன.7- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அர வையை துவங்கிட கோரி கடந்த டிசம்பர் 14 அன்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழ னிச்சாமி தலைமையில் துவங்கிய காத்தி ருக்கும் போராட்டம் வெள்ளியன்று 25 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் என். ஸ்டாலின்குமார், கரும்பு விவசாயி சங்க நிர்வாகிகள் பி.போஸ், ராம்ராஜ், சுப்பர மணி, பெருமாள், எஸ்.முருகன், கிருஷ்ண மூர்த்தி, கார்த்திக், பெரிய ஊர்சேரி கிராம பெண்கள் உட்பட பலர் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.