districts

img

மேலூர் தாலுகாவில் பேருந்து நிறுத்த நிழற்குடை, பள்ளி வகுப்பறை கட்டிடப்பணிகளை சு.வெங்கடேசன் எம்.பி.,தொடங்கி வைத்தார் 3 மாதத்தில் நிறைவடையும் என உறுதி

மதுரை, செப்.15 -  கிராமப்புற மாணவர்களின் கல்வியை உறுதி செய்வோம். அர சுப் பள்ளிகளைப் பாதுகாப்போம். இதுவே எங்களது லட்சியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயற்குழு உறுப்பின ரும் மதுரை மக்களவை உறுப்பின ருமான சு.வெங்கடேசன், ஆசிரி யர்கள்,மாணவர்கள் மத்தியில் பேசினார்.  மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் செப்டம்பர் 14 செவ்வாயன்று மேலூர் தாலுகா பகு திகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு, பணிகளை ஆய்வு செய்தார். கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  பூசாரிபட்டி (பேருந்து நிழற்குடை), பெரு மாள்பட்டி(பேருந்து நிழற்குடை, தெற்குத்தெருவில் (புதிய வகுப்ப றை கட்டடங்கள்) ஆகிய பணிகளு க்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்தப் பணிகள் மூன்று மாதத்திற்குள் (90 வேலை நாட்கள்) நிறைவடையும் என்று தெரி வித்தார்.  தொடர்ந்து புதுசுக்காம்பட்டி யில் ஊராட்சி அலுவலகம், கீழை யூரில் அங்கன்வாடி மையம் ஆகிய வற்றை திறந்துவைத்தார். பணி களின் மொத்த மதிப்பீடு ரூ.58.84 லட்சம் ஆகும். தெற்குத்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றியப்பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டட அடிக்கல் நாட்டுவிழாவிற்கு வருகை தந்த சு.வெங்கடேசனை பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் வரவேற்றனர். பின்னர் மாணவ-மாணவிகளிடம் நீங்கள் எந்த வகுப்பு படிக்கிறீர்கள்? டீச்சர்கள் நன்றாக பாடம் சொல்லிக்கொடுக்கிறார்களா? உங்களுக்காக மூன்று வகுப்ப றைகள் புதிதாக கட்டிக்கொடுக்க வந்துள்ளேன் என்றார். அதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் நன்றி தெரிவித்தனர். குறிப்பாக பூசாரிபட்டியில் கடந்த முறை ஆய்வுக்குச் சென்ற போது சதுர்மடங்கனில் உள்ள நியாயவிலைக்கடையின் முகப்பும், தரைத்தளமும் சேதம டைந்திருந்தது, அதை உடனடி யாக சீரமைக்க வேண்டுமென ஒன்றிய வளர்ச்சி அதிகாரிகளை கூடுதல் ஆட்சியர் சரவணனும், சு.வெங்கடேசனும் கேட்டுக் கொண்டார். இரண்டு மாதங்களு க்கு பின் (செவ்வாயன்று) சென்ற போது அந்த நியாயவிலைக்கடை சீரமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் நபார்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பணி கள் நடைபெற உள்ளன. குறிப்பாக அரசுப் பள்ளிகள் பாதுகாப்பில்  கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

பெண்கள் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை
குறிப்பாக மேலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற சு.வெங்கடே சன் எம்.பி., பள்ளி ஆசிரியர்களிடம் பள்ளியின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது மேலூ ரைச் சுற்றியுள்ள 65 கிராமங்க ளைச் சேர்ந்த மாணவிகள் சுமார் மூன்றாயிரம் பேர் இங்கு படிக்கின்ற னர். போதுமான வகுப்பறைகள் இல்லாததால் ஒரு வகுப்பில் குறைந்தது 70 மாணவிகள் உள்ள னர். 13 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் தேவை என்றனர். அப் போது சு.வெங்கடேசன், நபார்டு சார்பில் நடைபெறும் பணிகளில் மேலூர் அரசுப் பள்ளி இடம் பெற வில்லை என்பதை அறிந்துதான் வந்துள்ளேன். ஏன் உங்கள் பள்ளி இடம்பெறவில்லை. என்ன காரணம் எனக் கேட்டறிந்தார். பின்னர் உடனடியாக அதற்கான மதிப்பீடுகளை தயார் செய்து தாருங்கள் என்றார். தொடர்ந்து மற்றொரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,200 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். மக்களவை உறுப்பி னர் வெங்கடேசனிடம் ஆசிரியர் கள் பள்ளியின் கழிப்பறையின் நிலையை எடுத்துக்கூறினர். இந்த கோரிக்கையையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். பள்ளிகளுக்கு சென்ற அவர் ஆசிரியர்களிடம் பேசுகையில், உயர்ந்த நோக்கத்தோடு பணி யாற்றும் உங்களைப் பாராட்டுகி றோம். அதே நேரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கும் நாம் நியாயம் வழங்க வேண்டும். பத்து பேரிடம் பேசினால் எவ்வளவு சக்தி தேவைப் படும் என்பது எங்களுக்குத் தெரி யும். நீங்களோ 70 மாணவிகளி டம் தினம்தோறும் பேசுகிறீர்கள். எவ்வளவு சக்தி தேவைப்படும் என் பதை நினைத்தால் மனது வலிக்கி றது. உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். “கிராமப்புற மாணவர்களின் கல்வியை உறுதி செய்வோம் அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்” என்ற உங்கள் லட்சியத்திற்கு நானும் எங்கள் அமைப்பும் துணை நிற்கும் என்றார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி. செல்லக்கண்ணு எஸ்.பி.இளங் கோவன், மேலூர் தாலுகா செயலா ளர் எம்.கண்ணன், பொருசுபட்டி சேகர் மற்றும் இடைக்கமிட்டி செய லாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், உறுப்பி னர்கள், மேலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் சென்றனர்.

;