districts

img

சு.வெங்கடேசன் எம்.பி. தொகுதி நிதியில் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல்

மதுரை, ஏப்.1-  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு  நிதி  ரூ.15 லட்சத்தில் 56 ஆவது  வார்டு கரிமேடு தேவசகாயம்  மகப்பேறு மருத்துவமனை யில் பார்வையாளர்கள் காத்  திருப்பு அறை மற்றும் மன்னர் பாண்டித்துரை சேதுபதி  மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை கூடுதல் கட்டி டம் கட்டுவதற்கு  அடிக்கல்  நாட்டு நிகழ்ச்சி வெள்ளி யன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னி யம்மாள்  தலைமை வகித் தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ  னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜா. நரசிம்மன், பகுதிக் குழு செயலாளர் வை. ஸ்டா லின், மாவட்டக்குழு உறுப்பி னர் ஏ.பாண்டி மற்றும் தேவ சகாயம் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மோனிகா,  பாண்டித்துரை சேதுபதி பள்ளி தலைமை ஆசிரியர் நாகநாதன் மற் றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.