கோவை, நவ.29- கோவையில் பந்தையசாலை மற்றும் சுங்கம் பகுதியில், பந்தையசாலை வர லாற்றை பறைசாற்றும் வகையில் குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயத்தின் சிலை கள் அமைக்கப்பட்டு, புதனன்று திறக்கப் பட்டன. இன்றைய கோவை, பந்தையசாலை ரவுண்டானா பகுதி, பிரிட்டிஷ் ஆட்சிக்கா லத்தில் குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயம் நடைபெறும் இடமாக இருந்தது. இத னிடையே பந்தையசாலை வரலாற்றை பறை சாற்றும் விதமாக குதிரை பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயத்தின் சிலைகள், பந்தைய சாலை மற்றும் சுங்கம் பகுதியில் அமைக்கப் பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இந்த சிலை களை, புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணை யர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகி யோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த சிலைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். கோவையில் குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயங்கள் நடைபெற் றதை பறைசாற்றும் வகையில் இந்த இரண்டு சிலைகள் திறக்கப்பட்டுள்ளது. இது போன்ற சிலைகள் மக்களின் பார்வைக்கு அழகான தாக அமையும். குறிச்சி பகுதியில் அமைக் கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை இன்னும் சில தினங்களில் திறக்கப்படும் என்றார். மேலும், போதிய மழை பெய்த பிறகும், கால் வாய்கள் தூர் வாரப்படாததால் குளங்கள் நிறையவில்லை என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுகுறித்த ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், சின்ன சின்ன பிரச்சனைகள் உள்ளது. அதனை முழு மையாக ஆய்வு செய்து தீர்வு காணப்படும். வரும் காலங்களில் முழுமையாக நீர்வழிப் பாதைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, முழுமையாக குளங்களுக்கு நீர் நிரம்பு வதை உறுதி செய்யப்படும், என்றார்.