மதுரை, ஜூன் 10- பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, சோக்கோ அறக்கட்டளை, நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன் ஆகியவற்றின் சார்பில் “கல்வி, ஜனநாயகம், சுதந்திரம் காத்திடவே மாநிலக் கல்விக் கொள்கை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஜூன் 10 அன்று நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கில் நடைபெற்றது. நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேச னின் மேலாண்மை அறங்காவலர் வழக்க றிஞர் எஸ்.செல்வ கோமதி தலைமையுரை யாற்றினார். மூட்டா தலைவர் செந்தாமரைக் கண்ணன் வரவேற்றார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, கருத்துரையாற்றினார். அவர் பேசுகையில், பள்ளிக் கல்வியில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கி பல்கலைக் கழ கங்களுக்கான பொதுப் பாடத்திட்டம் வரை தேசியக் கல்விக் கொள்கை 2020 தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றை கவனத்தில் எடுத்து மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க உருவாக்கப்பட்ட உயர்மட்டக் குழு, தேசியக் கல்விக் கொள் கையின் பாதகமான எந்த அம்சமும் மாநிலக் கல்விக் கொள்கையில் இடம் பெறாத வகை யில் மாநிலக் கல்விக் கொள்கையை வகுத் துத் தர வேண்டும் என்றார்.
சோக்கோ அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் வழக்கறிஞர் அ.மகபூப் பாட்சா, இந்திய சமூக விஞ்ஞான கழக மதுரையின் செயலாளர் பேரா.விஜய குமார், முன்னாள் காவல் அதிகாரி வழக்க றிஞர் பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இக்கருத்தரங் கில் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய தலைவர் பேரா.முரளி, மூட்டா பெரியசாமி, பேரா.கிருஷ்ணமூர்த்தி, பேரா.ராஜமாணிக் கம் உள்ளிட்ட கல்வியாளர்களும், கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்ட னர். பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி யை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வி யை வலுப்படுத்துவதும், பள்ளி இறுதித் தேர்வின் அடிப்படையில் உயர் படிப்பில் சேருவதும் மட்டுமே சரியானதாக இருக்கும். நுழைவுத் தேர்வுகளான நீட் (NEET) மற்றும் கியூட் ( CUET) ஆகியவை மாநிலங்கள் / யூனி யன் பிரதேசங்களின் கூட்டாட்சி உரிமைகளை மறுப்பதற்கும், கார்ப்பரேட்மயமாக்கல் தொழில்முறை படிப்புகள் மற்றும் மனித நேயம், அடிப்படை அறிவியல் படிப்பு களை பயிற்சி வணிகத்தின் மூலம் மேம் படுத்துவதற்கும், அதன் மூலம் உயர் வகுப்பு கள் / சாதியினருக்கு உயர்கல்வியை முழு வதுமாக ஒதுக்குவதற்கும் சதி செய்கின்றன என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.