districts

மதுரை முக்கிய செய்திகள்

இன்று ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

தூத்துக்குடி, செப். 27  தூத்துக்குடி மாவட்டத்தில்  28ஆம் தேதி செல்லப் பிராணிகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் 28.09.2022-அன்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி, கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்த கங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி இலவச மாக போடப்படுகிறது. பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் செல்லப் பிராணிகளை ரேபிஸ் நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் பேருந்தை வழிமறித்து தகராறு: 2பேர் கைது!

தூத்துக்குடி, செப். 27  சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் மதுபோதையில் பஸ்சை வழிமறித்து தகராறு செய்த 2பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நெல்லையிலிருந்து சாத்தான்குளத்திற்கு திங்கள் இரவு ஒரு அரசு பேருந்து புறப்பட்டு வந்து கொண்டி ருந்தது. இந்த பேருந்தை நெல்லை சாந்தி நகரை சேர்ந்த ஒட்டுநர் ஜான் இன்பராஜ் (52) என்பவர் ஓட்டி வந்தார்.  சாத்தான்குளம் அருகே புளியங்குளம் கிராமத்தில் வரும்போது 2பேர் குடிபோதையில் பேருந்தை வழி மறித்து தகராறு செய்தனர். உடனே பயணிகள் 2பேரை யும் விலக சொல்லியும் கேட்காமல் அவர்கள்  பேருந்து க்கு முன்னால் அமர்ந்து தகராறு செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் வந்து கொண்டிருந்த சாத்தான்குளம் காவல் துணை ஆய்வாளர்  ரத்தினராஜ் மற்றும் காவலர்கள் அவர்கள் 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அதில் அவர்கள் கருங் கடல் கிராமத்தை சேர்ந்த சூசை மகன் ராஜாசிங் (38) பழனியப்பபுரம் காந்திராஜ் மகன் துரைசிங் (46) என்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக ஒட்டுநர் ஜான் இன்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறை யினர்  2பேரையும் கைது செய்தனர்.

பள்ளி மாணவி தற்கொலை

தூத்துக்குடி, செப். 27  தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சில்கன்பட்டி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் செல்வி அனுஜா கிருஷ்ணா (15), தூத்துக்குடி மில்லர் புரத்தில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திங்கள்  இரவு 9 மணி அளவில் திடீரென வீட்டின் குளியலறைக்கு சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவர் தந்தை ஜெயக்குமார் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர்  (பொறுப்பு) அசோகன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரயில்வே பணிகளுக்காக வைத்திருந்த ரூ.8லட்சம் காப்பர் வயர்கள் திருட்டு: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி, செப். 27  திருச்செந்தூர் அருகே ரயில்வே பணிகளுக்காக வைத்திருந்த ரூ.8லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர் திருடு போனது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரை ரயில்வே மின் பாதை அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மன்புரம் அருகே மூலக்கரை ரயில்வே கேட் அருகே வைத்திருந்த 2688 மீட்டர் காப்பர் வயர்களை யாரோ மர்ம ஆசாமி கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இதுகுறித்து ஒப்பந்த நிறுவனத்தின் சூப்பர்வைசர் ராஜ்குமார் (45) என்பவர் ஆறுமுகநேரி காவல் நிலை யத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

செப். 30இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி ,செப். 27- நெல்லை மாவட்ட ஆட்சியர்  விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 10.30 மணி க்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக் கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே குறைதீர்க்கும்நாள் கூட்டத் தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பய னடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச சைக்கிள் வழங்கல்

கடமலைகுண்டு, செப்.27- கடமலைகுண்டு அருகே உள்ள குமணன்தொழு அரசு  மேல்நிலைப் பள்ளியில் 27 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா ஆண்டிபட்டி சட்டமன்ற  உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கடமலை-மயிலை ஒன்றியக் குழுத் தலைவர்  சித்ரா, பள்ளித் தலைமை ஆசிரியர் அமுதா, பெற்றோர்  ஆசிரியர் சங்கத் தலைவர் ஆசையன் மற்றும் ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட அணைகள் நீர்மட்டம் குறைந்தது

திருநெல்வேலி, செப். 27- நெல்லை மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் வறண்டுவிட்டன. மாவட்டத்தில் உள்ள சுமார் 1205 குளங்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் குளங்கள் முற்றிலுமாக வறண்டு மண் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. மேலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை காப்பாற்றுவதற்காக பயிரிட்டுள்ள பயிர்களும் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்பட 6 அணைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 92.90 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு தற்போது வினாடிக்கு 336 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது நெற்பயிர் சாகுபடி பணிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1104.75 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், கடுமையான வெயில் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்த நிலையில் கடந்த 7 நாட்களில் 7 அடி  குறைந்துள்ளது. தினமும் சராசரியாக 1 அடி நீர் இருப்பு குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த 21-ந்தேதி சேர்வலாறு அணை நீர்மட்டம் 102.30 அடியாக இருந்த நிலையில் தற்போது 95.40 அடியாக குறைந்துள்ளது. இதேபோல் மாவட்டத்தில் அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

நாகர்கோவில்-மேலப்பாளையம்  ‘இரட்டை ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு பெறும்’

கோட்ட மேலாளர் முகுந்த் தகவல்

திருநெல்வேலி,செப். 27- நாகர்கோவில்-மேலப் பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை பணி கள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்று திரு வனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் தெரிவித்தார். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் சார்பில் நாகர்கோவில்- மேலப் பாளையம் வரை மின்மய மாக்கலுடன் புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் 4 கட்டங்களாக நடக்கிறது. தற்போது வள்ளி யூரில் இருந்து நாங்குநேரி வரை மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள் ளது. இதையடுத்து இந்த ரெயில் பாதையில் ரயில்வே தென்சரக பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் திங்கட்கிழமை மாலை யில் டிராலியில் அதிகாரி களுடன் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாலை 3 மணி அளவில் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் வரை அதிவேக மாக ரயிலை இயக்கி சோத னை ஓட்டம் நடந்தது. இந்த ரயிலில் தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், திரு வனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் மற்றும் அதிகாரிகள் பய ணம் செய்தனர்.  ரயில் இயக்க நடவ டிக்கை பின்னர் ரயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் வள்ளியூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-  நாங்குநேரி- வள்ளியூர் இடையே அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில இடங்களில் சிறு, சிறு குறைகள் தென்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திங்களன்று டீசல் என்ஜின் ரயில் மூலம் சோதனை செய்யப்பட்டது. நாகர்கோ வில்- மேலப்பாளையம் இடையே நான்கு கட்டப்பணி களில் 2 கட்டப்பணிகள் நிறைவு பெற்று சோதனை ஓட்டம் நடந்துள்ளது. நாகர் கோவில்- மேலப்பாளையம் இடையே அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து, இரட்டை ரயில் பாதை போக்குவரத்து தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரவு எண்.2- ஐ ரத்து செய்யக்கோரி மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி,  செப். 27 மின்வாரிய உத்தரவு எண் இரண்டை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி  தூத்துக்குடி  அனல் மின்நிலையம் முன்பு அனைத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறி யாளர்கள் சங்கம் சார்பில்  திங்களன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.  காத்திருப்பு போராட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்சார பொறியாளர் சங்கம் செயலாளர் அரிய செல்வம், தமிழ்நாடு மின் பொறியாளர் கழகம் செயலாளர் பிறைசூடி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செயலாளர் கணபதி சுரேஷ், மாநில நிர்வாகி அப்பாதுரை, மின்சார தொழிலாளர் சம்மே ளனம் சார்பில் செயலாளர் முத்துக்குமார், ஐக்கிய சங்கத்தின் செயலாளர் நயினார், டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் பெடரே சன் செயலாளர் ஜெய கணேஷ், ஐஎன்டியுசி செயலாளர் சர்தார், மறு மலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் செயலாளர் எபநேசர் தாஸ், விடுதலை முன்னணி செயலாளர் சேகர் ஜெயபால், தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பு செயலாளர் ஆனந்தம், எம்ப்ளாயி பெடரேஷன் செயலாளர் வெள்ளை விநாயகம், ஃபார்வர்ட் பிளாக் தொழிற்சங்க தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரசல், மாவட்ட தலை வர் பேச்சிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இந்தப் போராட்டத்தில் சுமார் ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் ஊழி யர்கள் கலந்து கொண்டனர். திங்களன்று இரவு  சென்னையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து  போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு நினைவு பரிசுகள்

தென்காசி, செப் .27- தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாயன்று முதலமைச்ச ரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் “பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய  யோஜனா” ஒருங்கிணைக் கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமையில் நடை பெற்றது. இவ்விழாவில், முதல மைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் பயன டைந்த பயனாளிகளுக்கு நினைவு பரிசுகள், முதல மைச்சரின் விரிவான காப்பீட் டுத் திட்டத்தில் புதியதாக பதிவு செய்த பயனாளிக ளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள், மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் சிறப் பாக பணிபுரிந்த பணியா ளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினையும், மேலும் 23.09.2022 அன்று நடைபெற்ற ஓவியப் போட்டி யில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் கள் மற்றும் கேடயம் ஆகிய வற்றையும் மாவட்ட ஆட்சி யர் ப.ஆகாஷ்வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (பொ) மருத்து வம் மற்றும் ஊரக நலப் பணிகள் மரு.கிருஷ்ணன், மாவட்ட திட்ட அலுவலர் (முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்) ஜி.அஸார் அகமது, காப் பீட்டு ஒருங்கிணைப்பா ளர்கள் ஜோதிவேல்,  பூமா சுந்தரி, வெங்கடேஷ், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

தேச சுதந்திரத்தின் விழுமியங்களை பாதுகாப்போம்! பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சூளுரை

மதுரை, செப்.27-  தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங் கத்தின் 18-ஆவது மாநாடு மதுரையில் ஞாயிறு, திங்கள் இரு தினங்கள் நடைபெற்றது. இரண்டாம் நாள் மாநாட் டில் தேச சுதந்திரத்தின் விழுமியங்களைப் பாதுகாப் போம். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பாதுகாப் போம் என பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சூளுரைத்தனர். தேச சுதந்திரத்தின் மகத்தான மாண்புகளையும் விழுமியங்களையும் பாது காப்போம். அரசு பொது  இன்சூரன்ஸ் நிறுவனங்க ளில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்  டும். வாடிக்கையாளர் களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அலுவலக மூடல், அலுவலக குறைப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வின் போது, பணி ஓய்வு பெற்றோ ருக்கும் அடிப்படை ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என் பன உள்ளிட்ட இருபது  தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. திங்களன்று நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா துவக்கி வைத்தார். சங்கத் தின் அகில இந்தியத் தலைவர் வி.ரமேஷ், துணைத் தலைவர் கே.வி.வி.எஸ்.என்.ராஜூ, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்  னாள் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொது இன்சூரன்ஸ் நிலைக்குழுச் செய லாளர் சஞ்சய் ஜா நிறைவுரையாற்றி னார். மதுரை மண்டலச் பொதுச் செயலாளர் டி.பாண்டியராஜன் நன்றி கூறினார். மாநாட்டில் தலைவராக ஒய்.சுப்பாராவ், துணைத் தலைவர்களாக பி.ஆர்.சசி,  ஓய்.பலராமன், எஸ்.வி.சங்  கர், எம்.புஷ்பராஜன், பொதுச் செயலாளராக: ஜி.ஆனந்த், இணைச்செயலாளர்களாக எஸ்.பாலசுப்பிரமணியன், வித்யதீர்த்தன், ஜெயசுதாராஜன், வெங்கடேஷ், பொருளாளராக என்.கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஞாயிறன்று மாநாட்டில் பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் “அரசியல் தெளிவு மிக்ககூர் வாள்களா பணியாற்றிவரும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் தங்களது அனுபவத்தை அனைத்துத் தரப்பு மக்களிடமும் பகிர்ந்துகொள்ளுங் கள். உங்கள் அனுபவம் மக்க ளுக்கு உதவும்” ஊழியர் களை கேட்டுக்கொண்டார்.




 

;