districts

img

சோத்துப்பாறை அணை நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது

தேனி, ஜூலை 19- நீர்ப்பிடிப்புப் பகுதி யில் மழை இல்லாத நிலை யில் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட் டம் 69 அடியாக உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அகமலை, கண்ணக்கரை, மற்றும் அத னைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி யில் போதிய அளவு தென்  மேற்கு பருவமழை பெய்யா ததால் கடந்த இருபது நாட்க ளுக்கும் மேலாக அணைக்கு முற்றிலும் நீர் வரத்தின்றி காணப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலை யில் பெரியகுளம் நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 25 கிராமங்களின் குடிநீருக் காக மூன்று கன அடி நீர் திறந்து  விடப்பட்டுள்ளது. தொட ர்ந்து அணையின் நீர்ப்பிடிப் புப் பகுதிகளில் மழை பெய்  யாது போனால் பெரியகுளம் நகராட்சி மற்றும் 25-க்கும்  மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற் படும் நிலை உள்ளது. அணை நிலவரம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.90 அடி. அணைக்கு வினாடிக்கு 1879 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து குடிநீர் மற்  றும் பாசனத் தேவைகளுக் காக 1867 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 58.14 அடியாக உள்ளது. வரத்து 1824 கனஅடி. திறப்பு  969 கன அடி. இருப்பு 3,046 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.30  அடியாக உள்ளது. பத்து கன அடி தண்ணீர் திறக்கப்படு கிறது.