districts

img

இளம் பெண் மரணத்தில் விசாரணை கோரி விருதுநகர் ஆட்சியரகம் முற்றுகை

விருதுநகர், ஏப்.12- சாத்தூர் அருகே திருமண மான சில மாதங்களில் சந்தே கத்திற்கு இடமான வகையில் இளம் பெண் ஒருவர் உயிரி ழந்தார். இதுகுறித்து உரிய முறை யில் விசாரணை செய்திட வேண் டுமென வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகலட்சுமி(19). இவருக்கும் சாத்தூர் அருகே உள்ள நாருகாபுரத்தைச் சேர்ந்த ஜான்பாண்டியன்(27) என்பவ ருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இரு தரப்பு பெரி யோர்களும் பேசி கடந்த 2021  டிசம்பர் 13 இல் இருவருக்கும் திரு மணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 10 அன்று மாலை முருகலட்சுமி மின்சாரம் தாக்கி இறந்து விட்ட தாக கூறப்பட்டுள்ளது. இதைய டுத்து, உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, முருக லட்சுமியின் உடலில் தீக்காயம் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து இருக்கன்குடி போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். முருக லட்சுமியின் உடல் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கூராய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவரது உடலை வாங்க மறுத்த உறவி னர்கள் உரிய விசாரணை நடத்த வேண்டும். உடலை மறுகூராய்வு செய்திட வேண்டுமென வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்பு, ஆட்சியர் மற் றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். அம்மனுவில் முருகலட்சுமி யின் தாயார் முருகேஸ்வரி கூறிய தாவது: முருகலட்சுமி இறந்த தகவல் தெரிந்து நாருகாபுரம் சென்ற போது, இருக்கன்குடி காவல் நிலையத்தினர் போக விடாமல் தடுத்தனர். பின்பு, வாக்குவாதம் செய்த பின்பே அனுமதித்தனர்.  மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரி வித்தனர். ஆனால், நாருகா புரத்தில் அன்று மதியம் 2 மணி முதல் மாலை 6.30 வரை மின்சாரம் இல்லை. எனவே, அவரது சாவில் சந்தேகம் உள்ளது. ஆகவே, ஜான்பாண்டியன், அவரது பெற்றோர், உறவினர் கள் ஆகயோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.