districts

img

சிக்கல் ஊராட்சியை மையப்படுத்தி ஊராட்சி ஒன்றியம் உருவாக்கக் கோரி கடையடைப்பு - மனிதச் சங்கிலி

இராமநாதபுரம், மார்ச் 29- இராமநாதபுரம் மாவட்டம் கட லாடி தாலுகா சிக்கல் ஊராட்சியை மையப்படுத்தி ஊராட்சி ஒன்றியம் உருவாக்கக்கோரி மார்ச் 29 புத னன்று மனித சங்கிலி இயக்கம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிக்கல் ஒன்றிய மேம்பாட்டுக் குழு சார்பாக நடைபெற்ற போராட் டத்திற்கு குழுவின் செயலாளர் கே.பச்சமால் தலைமை வகித்துப் பேசினார். குழு தலைவர் மிசா  சைபுதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினார் . இவர்கள் பேசு கையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். மாவட்ட ஆட்சியர் 60 ஊராட்சிகளை கொண்ட கட லாடி ஒன்றியத்தை நிர்வாக வசதி களுக்காக பிரித்து சிக்கல் நகரை  தலைமை இடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியமாக உருவாக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்ததாக குறிப்பிட்டனர் இதையடுத்து மேம்பாட்டுக்குழு நிர்வாகிகள் 30ஆம் தேதி சிக்கல் நகரை மையப்படுத்தி ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்ற நல்ல செய்தி அறிவிக்கப்படும் என நம்பிக்கையோடு தெரிவித்த னர். மேலும் மனிதச் சங்கிலி இயக்  கத்தில் சிறைக்குளம், பேய்க்குளம், கீழ செல்வனூர், தனிச்சியம், கொத்  தங்குளம் ஊராட்சித் தலைவர்கள் பேசினர். அனைத்து ஊராட்சித்  தலைவர்கள், 500 பெண்கள் உள்பட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மனிதச்சங்கிலியில் பங்கேற்றனர்.  கடைகள் முழுமையாக அடைக்கப்  பட்டிருந்தன. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். முத்து ராமு, சிபிஎம் தாலுகா செய லாளர் எஸ் போஸ் மற்றும் ராம சாமி, நம்புராஜ் ,வாலிபர் சங்கம் சார்பாக அம்ஜத் கான் ஆகியோர் பங்கேற்றனர்.

;