விருதுநகர், ஜன.19- கடந்த அதிமுக ஆட்சி யில் பில்லை திருத்தி அரசு பணம் ரூ.7லட்சத்தை தனி யார் நிறுவனம் மோசடி செய்தது தணிக்கை ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது என்று தமிழ் நாடு சட்டப்பேரவை பொ துக் கணக்குக் குழு தலை வரும் திருபெரும்புதூர் சட்ட மன்ற உறுப்பினருமான கு.செல்வபெருந்தகை தெரி வித்தார். விருதுநகர் மாவட்டத் தில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை பொ துக் கணக்குக் குழுத் தலை வர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். விருதுநகர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் முதியோர் சிகிச்சை பிரிவு மற்றும் மருந்தகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உரிய சிகிச்சை அளிக்கப்படுவ தையும், மருந்தகத்தில் போதுமான மருந்தாளர் உள்ளனரா எனவும், மருந்து களின் இருப்பு முறையாக கையாளப்படுகிறதா என வும் ஆய்வு மேற்கொண்ட னர்.பின்னர் ஆதிதிராவிட நலத்துறை பெண்கள் கல்லூரி விடுதி, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவல கப் பெருந்திட்ட கட்டடப்பணி கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் மேகநாத ரெட்டி, விருது நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவ லர் ஜெ.ரவிகுமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனை முதல்வர் சங்கு மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த செல் வப்பெருந்தகை கூறியதா வது :
விருதுநகர் மாவட் டத்தில் அனைத்து அதிகாரிக ளையும் அழைத்து 13 துறை களைச் சேர்ந்த புகார்களை பொது கணக்கு தணிக்கை அதிகாரி கொடுத்த அறிக்கை யின் அடிப்படையில் விசா ரணை மேற்கொண்டோம். அதில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் 330 படுக்கைகளில் 392 பேர் மருத்துவம் பார்த்ததாகவும், சாத்தூரில் 84 பேருக்கு 100 பேர், இராஜபாளையத்தில் 154 படுக்கைகளில் 202 பேர் மருத்துவம் பார்த்ததாகவும், அருப்புக்கோட்டையில் 276 படுக்கைகளில் 297 பேர் மருத்துவம் பார்த்ததாக வும் கணக்கு உள்ளது. படுக்கைகள் எண்ணிக் கையை விட அதிகமாக உள் நோயாளிகளுக்கு எப்படி மருத்துவம் பார்த்திருக்க முடியும் என கண்டுபிடித்தி ருக்கிறார்கள். மேலும், கூட்டுறவு மற்றும் உணவுத்துறையில் ஒரு தனியார் நிறுவனத்தி ற்கு அளவு செய்கின்ற இயந்திரங்களை ஆய்வு செய்வதற்கு தனியார் நிறு வனத்திற்கு ஒப்பந்தத்தை விட கூடுதலாக ரசீதை திருத்தி ரூ. 7லட்சத்து 34 ஆயிரத்து 537 எடுத்துள் ளார்கள். இந்தக் கையாடல் 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி யில் நடைபெற்றுள்ளது. இதற்கு துணைபோன அதி காரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர், இவ்வாறு அவர் தெரி வித்தார்.