நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளர் வீட்டில் சோதனை
திருநெல்வேலி, நவ.30- நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் ராம்நகரைச் சேர்ந்தவர் பகவதி (42). திருநெல்வேலி மாவட்ட நெடுஞ் சாலைத் துறை மண்டல பொறியாளர் (கட்டுமானம் பராமரிப்பு) அலுவலக கணக்கு பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் 2013- 2021ஆம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக புகார் எழுந்தது. அதன்பேரில், நெல்லை லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மெக்லரின் எஸ்கால் தலை மையில், ஆய்வாளர் ராபின் ஞானசிங் ஆகியோர் கொண்ட குழுவினர் பகவதியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டிலிருந்து பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள், அவரது மனைவி ரேவதி பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன; இதுதொ டர்பாக விசாரணை நடக்கிறது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
போலி அரசுப்பணி நியமன ஆணை வழங்கியவர் கைது
தென்காசி, நவ.30- தென்காசி, கடையந்லூர் கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் லட்சுமணன்(35).இவர் அப்பகு தியைச் சேர்ந்த பாண்டியராஜன், பாலமுருகன் ஆகியோ ரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தலா ரூ. 8 லட்சமும் சித்ரா என்பவரிடம் ரூ.4 லட்சமும் வாங்கி னாராம். பின்னர் அவர்கள் அரசு வேலையில் சேர்வதற்காக போலியாக நியமன ஆணை வழங்கியுள்ளார். பாதிக்கப் ப்பட்டவர்கள் அளித்த புகாரை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் அழிப்பு
தென்காசி, நவ. 30- தமிழ்நாடு காவல்துறை இயக்குனரின் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறி வுரையின்படி தென்காசி மாவட்டம் முழுவதும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் என்று போலியாக ஸ்டிக்கர் ஒட்டி வந்த 127 வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டு, ஸ்டிக்கர் அகற்றப்பட்டது. போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டிச.2 தென்காசியில் மின்தடை
தென்காசி,நவ.30- தென்காசி மாவட்டத்தில் வரும் 02.12.2023 சனிக்கிழமை யன்று மின்தடை நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி கோட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, மற்றும் சாம்பவர் வடகரை, கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட புளியங்குடி மற்றும் வீரசிகாமணி, ஆலங்குளம், கீழப்பாவூர்,சங்கரன் கோவில் ஆகிய உபமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிக ளில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளார்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் காப்பீட்டுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் நெல்லை ஆட்சியர் அறிவிப்பு
திருநெல்வேலி, நவ.30- நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்தி கேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு அமைப்புசாரா தொழிலா ளர்களின் விவரங்களை பதிவு செய்ய www.eshram.gov.in என்ற தேசிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்தில் கட்டுமான தொழி லாளர்கள், ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலா ளர்கள், உப்பள தொழிலாளர்கள், சிறு, குறு விவசாய தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், ரிக்சா தொழிலா ளர்கள், காய்கறி பழ தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தச்சு வேலை செய்வோர், கேபிள் டி.வி.ஆப ரேட்டர்கள், டீக்கடை தொழிலாளர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், ஆட்டோ டிரை வர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மற்றும் விபத்தினால் மாற்றுத்திறனாளியானதற்கான காப்பீடு பிரதம மந்திரி சுரக்சா பீமா யோஜனா திட்டத்தின் மூலம் பெறலாம். பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.03.2022-க்குள் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படுகிறது. எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் இணையதளத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் யாரேனும் 31.03.2022-க்குள் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருந்தாலோ அல்லது மாற்றுத்திறனாளி ஆகி இருந்தாலோ, அந்த தொழிலா ளர்கள் அல்லது அவர்களின் வாரிசு தாரர்கள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். 31.03.2022-க்கு பிறகு யாரேனும் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருந்தாலோ, மாற்றுத்திறனாளி ஆகி இருந்தாலோ, அந்த தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள், தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து காப்பீட்டு தொகையை பெறலாம். மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவல கம், ஒருங்கிணைந்த தொழிலாளர்கள் துறை அலுவலக கட்டிட வளாகம், 2ம் தளம், பெருமாள் புரம், திருமால் நகர், திரு நெல்வேலி-627007, தொலைபேசி எண்:0462-2555014 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 110 அடியை நெருங்கியது
திருநெல்வேலி,நவ.30- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை பரவ லாக மழை பெய்தது. மணிமுத்தாறு அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 23.4 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. சுமார் 1 மாதமாக அங்கு சுற்றுலா பயணி கள் குளிக்க தடை நீடிக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 76.40 அடியாக உயர்ந்துள்ளது. அணை க்கு வினாடிக்கு 488 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 109.10 அடி யாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 121 அடியாகவும் உள்ளது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 920 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. பாபநாசத்தில் 12 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, நாங்குநேரி, அம்பை, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சுமார் 700 குளங்கள் நிரம்பி உள்ளதால், விவசா யப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள் ளது. ஆனால் தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
குண்டா சட்டத்தில் 4 பேர் கைது
தென்காசி, நவ.30- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர் கடையநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தும்பைமேடு பகுதியைச் சார்ந்த மருது பாண்டியன் ,வாசுதேவநல்லூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜ செல்வம், கீழப்புதூர் நடுத்தெருவை சேர்ந்த செல்வகுமார், டி.என். புதுக்குடியை சேர்ந்த மணிகண்ட ரவி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கஞ்சா விற்றவர்கள் கைது
தென்காசி, நவ.30- தென்காசி மாவட்டம் குற்றாலம், இலஞ்சி வள்ளியூர் ஜங்ஷன் பகுதியில் ஆய்வாளர் ராஜகுமாரி ரோந்துபணி யில் ஈடுபட்டிருந்தார். அப்போது தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன், மாதவன் ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை கண்டுபிடித்து, இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவர்களிடம் இரு.ந்த ஒரு கிலோ 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
320 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி.நவ.30- தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 320 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி களை அமைச்சர் கீதாஜீவன் இன்று வழங்கினார். தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நவம்பர் 30 அன்று நடைபெற்றது. இவ்விழா வில் சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு 320 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார். விழாவிற்கு பள்ளி தாளாளர் அகஸ்டின்,தலைமை ஆசிரியர் அமல்ராஜ், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர் ரிக்டா ஆர்தர் மச்சாது மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விபத்தில் காயமடைந்த சிறுவன் பலி
தூத்துக்குடி.நவ.30- தூத்துக்குடி மாவட்டம் கோயில்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் குமார் .இவரது மகன் கோபி (வயது 7). நவம்பர் 26 ஆம் தேதி அன்று தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் அருகே உள்ள பாட்டி வீட்டிற்கு சிறுவன் கோபி தனது தந்தை குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். கிழக்கு கடற்கரை சாலையில் பட்டினமருதூர் அருகே செல்லும்போது மாடு குறுக்கே வந்தது. இதில் மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் கோபி மற்றும் அவரது தந்தை குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்தக் காயமடைந்த கோபி மற்றும் அவரது தந்தையை தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் கோபி சிகிச்சை பலனின்றி இறந்தார் கடந்த 21 ஆம் தேதி மாடு குறுக்கே வந்ததில் நடுநாலு மூலைக்கிணறைச் சேர்ந்த ஆசிரியர் சதீஸ் பலியானார். இதன் பிறகாவது மாவட்ட நிர்வாகம் சாலைகளில் கால் நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லூரி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி.நவ.30- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பண்டாரஞ்செட்டி விளையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் செல்வபாரதி (25). இவர் ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் செல்வபாரதி வீட்டில் தூக்குப்போட்டு இறந்துகிடந்தார். இது தொடர்பாக தகவலின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திரு ச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருங்குடியில் 5 பேரை கத்தியால் வெட்டிய சாதி ஆதிக்க வெறியர்கள் கைது
மதுரை,நவ.30- மதுரை விமான நிலைய சாலையில் உள்ள பெருங்குடி சங்கையா கோவில் தெரு பகுதியில் திங்களன்று இரவு ஆறு வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டி விட்டு இரு வாலிபர்கள் தப்பிச் சென்றனர். காயமடைந்த ஐந்து பேரும் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றர். இது தொடர்பாக பெருங்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பெருங்குடி சௌராஷ்ட்ரா காலனியைச் சேர்ந்த மாரி, முனியாண்டி கோவில் தெரு வைச் சேர்ந்த சசிகுமார் ஆகிய இருவர் மீதும் எஸ்சி /எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்தனர். சம்பவத்தன்று இருவரும் காவல்துறை வருவதை அறிந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் காயமடைந்து மாரி மதுரை அரசு மருத்துவமனையிலும், சசி தனியார் மருத்து வமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை கைது செய்து, விசராணை நடத்தி வருகின்றனர்.
கோவில் நிகழ்ச்சியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
வெம்பக்கோட்டை, நவ.30- வெம்பக்கோட்டையில் கோவில் கும்பாபிசேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரு பெண்களின் கழுத்தில் கிடந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள கோமாளிபட்டியைச் சேர்ந்தவர் சரோஜா (61). இவர் மீனாட்சி சொக்காநாதர் கோவில் கும்பாபி சேக நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றார். இதேபோல், வெம்பக்கோட்டை வடக்குத் தெரு வைச் சேர்ந்த முருகானந்தம்(70) என்ற பெண்ணிடமும் 6 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற னர். இதுகுறித்து சரோஜா, முருகானந்தம் ஆகியோர் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரிக்கின்றனர்.
ஒரே நேரத்தில் 2 தேர்வுகளால் மாணவர்கள் குழப்பம்
ஒட்டன்சத்திரம், நவ.30- அரையாண்டு தேர்வு காலத்தில் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்து வதால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத் திட்ட மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி முடிய அரையாண்டு தேர்வுகள் நடத்துகிறது. இந்நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்பதாம் வகுப்பு மாண வர்களின் அறிவியல் தேர்வுக்கு மறுநாள் இத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் முன்னிலை மதிப்பெண் பெறும் 100 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. அரையாண்டு தேர்வு நடக்கும் காலத்திலேயே ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்துவதால் எந்த தேர்வுக்கு தயாராவது என ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்து அரசு தேர்வு துறை பரிசீலித்து மாணவர்களின் நலன் கருதி ஊரகத் திறனாய்வு தேர்வை அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஊரகத் திறனாய்வு தேர்வு தொடங்கிய ஆண்டு முதல் சுமார் 40 ஆண்டு காலமாக ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் விதம் உதவித் தொகை வழங்கப் பட்டு வருகிறது இத்தொகையை மாதம் ஆயிரம் ரூபாய் என வழங்கவும் மாண வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் 43.கி.மீ. தூரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு அனுமதி மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் அறிவிப்பு
தூத்துக்குடி.நவ.30- தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் நவம்பர் 30 அன்று நடைபெற்றது. ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகை யில், தூத்துக்குடி மாநக ராட்சியில் உள்ள 60 வார்டுக ளிலும் தெருவிளக்குகளை பராமரிக்க பணி நீடிப்பு செய்யப்பட்ட காலத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.6 லட்சத்து 37 ஆயிரம் மாநகர பொது நிதியிலிருந்து செலவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, மாநக ராட்சியின் 4 மண்டல பகுதி களிலும் மேற்கொள்ளப் பட்டு வரும் குடிநீர் மற்றும் வடிகால் பராமரிப்பு பணி கள், மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை 43.கி.மீ. தூரத்திற்கு ரூ 45 கோடியே, 19 லட்சம் மதிப்பீட்டில் 8 சிப்பந்திகளாக மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தூத்துக்குடியில் சமீ பத்தில் திறக்கப்பட்ட அறி ஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மூன்று தளங்க ளில் உள்ள வணிக வளாகக் கடைகளை ஒப்பந்த புள்ளி கள் திறக்கப்பட்டு கூடுதல் தொகைக்கு கேட்டவர்களு க்கு ஒப்பந்தம் வழங்கி மாநக ராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் நட வடிக்கை மேற்கொள்ளப் படுகிறது என்று கூறினார், தொடர்ந்து கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில ளிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன.