districts

img

அழகப்பா பல்கலை., - ஸ்கூபா டைவிங் அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிவகங்கை, ஆக.25- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், புதுச் சேரி டெம்பிள் அட்வென்சர்ஸ் ஸ்கூபா டைவிங் அகாடமி எனும் ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.  அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ரவி, முன்னிலையில் பதிவா ளர் (பொ) ராஜ்மோகன், புதுச்சேரி டெம்பிள் அட்வென்சர்ஸ் நிறுவனர் அரவிந்த் தருண் ஸ்ரி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளனர். கடலியல் துறைத் தலைவர் ரவிக் குமார் உடனிருந்தனர்.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக கடலியல் மற்றும் கடலோர வியல் துறை மாணவர்கள் தங்களின் முதுகலை பட்டப்படிப்புடன் கூடுத லாக ஸ்கூபா முதுகலை பட்டயப் படிப்பும் மேற்கொள்வார்கள். இப்பயிற்சி மூலம் ஆழ்கடல் தன்மை, கடல்வாழ் உயிர்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டறிவதற்கும், அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களான கடல்பசு, கடற்ஆமை, கடல்குதிரை ஆகியவற்றை பாதுகாக்கவும், பவளப்பாறைகள் மற்றும் அவற்றை சார்ந்த கடல்வாழ் உயிரினங்களின் பாதிப்பு பற்றியும் அறிந்து கொள்வ தற்கும் மற்றும் தொல்லியல் துறை சார்ந்த கடல சார் ஆராய்ச்சிகள் மேற் கொள்வதற்கும் ஆழ்கடல் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.