தேனி, டிச.11- ஓய்வூதிய பலன்கள் ,86 மாத அக விலைப்படி நிலுவை வழங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற் றோர் நல அமைப்பு சார்பில் தேனி மாவட் டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது. தேனி, போடி, பெரியகுளம், கம்பம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .மத்திய சங்க பொதுச்செய லாளர் கஸ்பர் ராஜ் ,பொருளாளர் ராஜேந்தி ரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .சங்க நிர்வாகிகள் பாலையா , ராஜாமணி ,ராமசாமி ,நாகராஜன் ,விஜய குமார், மாரிமுத்து பூபதி ,குருவா ரெட்டி , சுப்பையா, நெல்சன் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.