districts

சிவகங்கை மாவட்டத்தில் பழுதான 1200 கண்மாய் மடைகளை சீரமைத்திடுக!

சிவகங்கை, மே 28- சிவகங்கை மாவட்டத்தில் பழுதான 1200 கண்மாய் மடைகளை சீரமைக்க வேண்  டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் வலி யுறுத்தினார். சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலை வர் ஆஷா அஷித் தலைமையில் ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் நடந்தது. இக்கூட் டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் பேசியதாவது:  சிவகங்கை மாவட்டத்தில் 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள்  உள்ளன. ஒவ்வொரு கண்மாயும் சங்கிலித் தொடர் இணைப்போடு உள்ளது. ஒரு கண்மாயில் தண்ணீர் நிரம்பினால் அடுத்த  கண்மாய்க்கு தண்ணீர் செல்கிற ஏற்பாடாக  சங்கிலி தொடர் இணைப்பாக அந்த காலத்தி லேயே கண்மாய்கள் உருவாக்கப்பட்டது. மடைகள் பழுதானதால் ஏராளமான கண்  மாய்களில் தண்ணீர் நிற்காமல் வெளியேறி விவசாயம் பொய்த்துப்போய் விவசாயி கள் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக காளையார் கோவில் கல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய கல்வலி, கல்குளம் கண்மாய்களும், பொதுப்பணித் துறை கண்மாய்களில் உள்ள மடைகள் பழு தடைந்துள்ளன. மடைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். வைகையாற்றில்  இடது வலது பிரதான கால்வாய்களில் உள்ள கருவேல் மரங்கள் அகற்றப்பட வேண்டும். கருவேல் மரங்கள் நிறைந் துள்ளதால் வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்தும் சாலை கிராமம்,ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள கண்மாய் வரைக்கும் தண்ணீர் செல்லாத நிலைமை உள்ளது. கருவேல் மரங்களை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  ஜூன் 30 ஆம் தேதிக்குள் கருவேல் மரங்கள் அகற்றப்படும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .சிவகங்கை சில்ட் கால்வாய் மேம்படுத்தப்  பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இது  தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்வ தாக ஆட்சியர் பதிலளித்தார். கடந்த காலங்களில் வறட்சி பாதித்த சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை, இளை யான்குடி, மானாமதுரை பகுதி விவசாயி களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்  டும் என்று தண்டியப்பன் வலியுறுத்தினார்.

;