இராமநாதபுரம், மே.31- இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் குழா யில் மோட்டர் பொருத்தி தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்ற கூட்டத்தில் தலைவர் ஆர்.கே.கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார். இராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற கூட்ட ரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ,துணைத்தலைவர் பிரவீன் தங்கம், அஜிதா பர்வீன், உதவி பொறியாளர் செல்வக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். நகர்மன்ற உறுப்பினர்கள் காயத்ரி, மஞ்சுளா, மணி கண்டன், ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன் உள்ளிட்டவர்கள் அவரவர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரு மாறு கோரிக்கை விடுத்தனர். ஏழாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பேசுகையில், எங்கள் பகுதிகள் மட்டுமல்லா மல் நகர் பகுதியில் முழுவதும் வீடுகளில் குடிநீர் மோட்டார் மூலம் பயன்படுத்தி அதிக குடிநீரை வீடுகளுக்கு எடுத்து மற்ற வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துகிறார்கள். ஆகவே மோட்டார்களை பறிமுதல் செய்யுமாறு நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த னர். இதையத்து உடனடியாக வீடுகளில் பயன்படுத்தும் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் விரைவில் சரி செய்யப் படும் என்று கூறினார்.