districts

அரசியல்  பிழைத்தோர்க்கு

மீண்டும் வந்த புத்தனுக்கு 
தவமிருக்க மரமில்லை...
நட்டு வைத்த கல் சொன்னது 
நாண்டு போன வயல் வெளிகளை...
எரிந்து போன பேருந்து சொன்னது 
கூட்டணிக் கதைகளை...

நடந்தாய் வாழி காவேரி சொன்னது 
என்எச் மணல் வெளி கதைகளை...!
தொட்டில்  பழக்கம் சுடுகாடு வரை”
சிரித்துக் கொண்டே படித்தார் 
லஞ்ச ஒழிப்பு அதிகாரி...!
எதிர்பார்த்த டிஎம்சி நீர் வரவில்லை
இலக்கை எட்டியது டாஸ்மாக் மது..!

கூரை போட்ட கணக்கில் 
சுடுகாட்டு பிணங்கள் சாட்சி செல்லாது போனது..! 
துண்டியவனும் குற்றவாளி 
கையறு நிலையில் செல்போன்கள்...!
விதை நெல் எல்லாம் விருந்தானது
தேசிய சொத்துகள் விற்பனை...!

வாக்குறுதிகள் 
கேட்டே வயசானது கூவம் ஆற்றுக்கு..!
பச்சோந்திகளும்,
தஞ்சாவூர் பொம்மைகளும்,
பூம் பூம் மாடுகளும்
தோற்றுப் போயின வேட்பாளர் தேர்வில்..!

அப்துல் சத்தார்

;