ஸ்ரீஹரிகோட்டா,ஆக.31- சந்திரயானின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற் பரப்பில் ஆய்வு செய்து வருகிறது. ஒரு பெரிய பள்ளத்தை கண்ட றிந்து தனது பாதையை மாற்றியது. தொடர்ந்து நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. இதுதவிர ஆக்சிஜன் இருப்பதையும் கண்டறிந்துள்ள ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா எனும் தேடு தலை தொடர்கிறது. இந்நிலையில் நில வின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டரின் ஆய்வு கருவி உறுதி செய்தது. விக்ரம் லேண்ட ரில் உள்ள RAMBHA-LP என்ற கருவி நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா உள்ளதை அளவிட்டுள்ளது. ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 5 முதல் 30 மில்லியன் வரையில் எலக்ட்ரான்கள் உள்ளது. பிளாஸ்மா சூழலை லேண்டர் முதன் முதலில் அள வீடு செய்துள்ளதாகவும் இதன் மூலம் நிலவிலிருந்து பூமிக்கு தொலைத் தொடர்பு கதிர்களை அனுப்பும் போது ஏற்படும் இரைச்சலை தவிர்க்கலாம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.