இராமநாதபுரம்,அக்.7- இராமநாதபுரம் மாவட்டம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திறந்து வைத்தார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும், மாணவர்க ளின் கல்வி, கலை மற்றும் விளையாட்டு போன்ற கூடுதல் பாடத்திட்டங்கள் உட்பட அவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. தற்போது பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 80 மாணாக் கர்களும், பதினொன்றாம் வகுப்பு பயிலும் 160 மாண வர்களும் இந்த மாதிரி பள்ளியில் பயிற்சி பெறுவ தற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பள்ளியில் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் 100 சதவீதம் தாங்கள் எழுதிய தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெரும் வகை யில் ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமை யினை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து அவர்களின் இலக்கை எய்திட வழிகாட்ட வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளர் டாக்டர்.சின்னதுரை அப்துல்லா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவி, பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாநில மாதிரி பள்ளி ஒருங்கிணைப்பாளர் நவநீத கிருஷ்ணன், தலைமையாசிரியர் ரவி மற்றும் ஆசிரியர் கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.