districts

img

மதுரை மருத்துவக் கல்லூரியில் விடுதிகள் திறப்பு

மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மாணவ - மாணவியர் விடுதிகள் மற்றும் புதிய நூலக கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். இதில் வணிக வரி - பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மேயர் இந்திராணி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.