districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரையில் மேலும் ஒரு பறக்கும் பாலம்

மதுரை, அக்.30- மதுரை நெல்பேட்டை முதல் அவனியா புரம் வரை 5 கிலோமீட்டர் தொலைவிற்கு மேலும் ஒரு பாலம் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை தெற்குவாசல் - வில்லாபுரம் சாலையில் ரயில்வே வழித்தடத்தை கடப்ப தற்காக தெற்கு வாசல் மேம்பாலம் உள் ளது. இந்த பாலம் இரு வழித்தடத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் கட்டப்  பட்டது. இந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பாலம் குறு கலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. போதிய பராமரிப்பு இல்லா மல் பாலம் சிதலமடைந்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,  ‘‘பாலம் விரை வில் பராமரிக்கப்பட உள்ளது. பாலத்தின் உயரத்தை உயர்த்த வேண்டும் என தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டதால், பாலத்தை உயர்த்தவும், பராமரிப்பு பணிகளை மேற் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலம் வலுவாக இருப்பதால், அதனை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் திட்டம் இல்லை. எனினும், பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரி சலை குறைக்க, அதன் அருகிலேயே நில  ஆர்ஜிதம் செய்து மற்றொரு பாலம் அமைக்  கும் திட்டம் உள்ளது. இந்த புதிய பாலம் நெல்பேட்டையில் இருந்து துவங்கி அவனி யாபுரம் வரை 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட தாக இருக்கும். இந்த பாலம் அமைக்கப் பட்ட பிறகு இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. புதிய பாலத்திற்கான ஆய்வுகள், ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணையில் 1500 கன அடி தண்ணீர் திறப்பு  லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு

தேனி, அக்.30- முல்லைபெரியாறு அணையில் 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதை தொட ர்ந்து லோயர் கேம்ப்பில் மின் உற்பத்தி 135 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது . வடகிழக்கு பருவமழை தொடங்கி யதைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை யை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்வதால் முல்லைப் பெரியாறு அணை பகுதியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது .மேலும் ரூல்கர்வ் முறைப்படி தண்ணீர் திறப்பை  அதிகரிக்க முடியாது. எனவே முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக ஞாயிறன்று அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்  கப்பட்டது. சனிக்கிழமை வரை 511 கன அடிநீர் திறக்கப்பட்ட நிலையில் ஞாயிறன்று காலை தண்ணீர் திறப்பு 1500 கன அடி யாக உயர்த்தப்பட்டது. அணையின் நீர்மட்  டம் 135.55 அடியாக உள்ளது.  வைகை அணையின் நீர்மட்டம் 69.52 அடியாக உள்ளது. அணைக்கு 732 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக நீடிக்கிறது. 100 கனஅடி நீர் வருகிறது. 40 கன அடிநீர் பாசனத்திற்கும், 60 கன அடி நீர்  உபரியாகவும் திறக்கப்படுகிறது. சோத்துப்  பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி யாக உள்ளது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.  மின் உற்பத்தி அதிகரிப்பு  தேக்கடி 1.2 மி.மீ மழை அளவு பதிவாகி  உள்ளது. லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக 511 கனஅடிநீர் திறக்கப்  பட்டதால் 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் 4 ஜென ரேட்டர்கள் மூலம் 135 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

சாலை விபத்தில் பெண் பலி

திருவில்லிபுத்தூர், அக்.30- திருவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரி ழந்தார். கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு வர்தன்(40). இவர் மனைவி பிரதீபா(38), மகள்கள் சாருண்ணிகா(6), சம்ருத்திகா(6), அண்ணன் கோவர்த்த ணன்(41), தம்பி சரவணராஜ்(29), அவரது மனைவி ஹரி பிரியா(28) ஆகியோருடன் தென்காசி மாவட்டம் கடைய நல்லூரில் உள்ள நண்பரின் திருமணத்திற்கு சனிக்கிழமை யன்று இரவு காரில் சென்றனர். காரை சரவணராஜ் ஒட்டி  வந்தார்.   ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில்  மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திருவில்லி புத்தூர்அருகே செம்பட்டையான்கால் விலக்கு அருகே வந்த போது, சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்களை போலீஸார் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவில்லிபுத்தூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  பரி சோதித்த மருத்துவர்கள் ஹரிபிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த பிரதீபா, குழந்தைகள் சாருண்ணிகா, சம்ருத்திகா ஆகிய மூன்று பேரும்  மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வரு கின்றனர்.

செந்துறை: மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்

நத்தம், அக்.30- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி செந்துறை அருகே பிள்ளையார்நத்தம் பகுதியில் அரசு அனுமதி யின்றி மணல் அள்ளப்படுவதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த பகுதியில் காவல் ஆய்வாளர்  தங்கமுனியசாமி உள்ளிட்ட போலீசார்கள் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் அரசு  அனுமதியின்றி செம்மண் அள்ளியதாக 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிராக்டர் ஓட்டு நர்களை தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை அருகே  தந்தை, மகன் கிணற்றில் மூழ்கி பலி  

சின்னாளப்பட்டி.அக்.30- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த பாபிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார்(45).இவ ரது மகன் விமல்குமார்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ராஜ்குமார் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள தனியார் நிறு வனத்தில் வேலை செய்து வந்தார்.  இந்நிலையில் ஞாயிறன்று அவரது சொந்த ஊரான பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றுக்கு தனது மகன் விமல்குமாருக்கு நீச்சல் கற்றுத்  தருவதற்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. நீண்டநேரமாகியும் மகனும் கணவரும் வராதால் மனைவி உறவினர்களுடன் விவசாய கிணற்றில் சென்று பார்த்துள்ளார். அவர்களின் உடைகள் கரையில் கிடந்துள்  ளது, இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். இதில் ராஜ்குமார் , அவரது மகன் விமல் குமார் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்த படி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல் ஆய்வா ளர் குரு வெங்கட், சார்பு ஆய்வாளர் பாலமுத்தையா ஆகி யோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.