கேரள விளையாட்டு ஆணையம் சார்பில், கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக நீச்சல் வீரர் மற்றும் வீராங்கனைகள் 10 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களைப் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையைப் கைப்பற்றினர். வெற்றி பெற்ற அணியினரை பல்கலைக்கழக வேந்தர்.முனைவர்.கே.ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தர்.எஸ்.நாராயணன், பதிவாளர்.வே.வாசுதேவன், மாணவர் நலத்துறை இயக்குநர் முத்துக்கண்ணன் , உடற்கல்வி இயக்குநர்கள் எஸ்.விஜயலட்சுமி, சிதம்பரம் மற்றும் நீச்சல் பயிற்சியாளர் உதயகுமார் ஆகியோர் பாராட்டினர்.