districts

img

சின்னாளபட்டியில் புதிய பூங்கா திறப்பு

சின்னாளபட்டி, ஜூலை 25-  திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 17 ஆவது வார்டு பொன் நகரில் 15 ஆவது மானிய நிதிக்குழு நிதி ரூ. 26 இலட்சத்தில் , புதிய பூங்கா கட்டப்பட்டது. இந்த  பூங்காவை செவ்வாயன்று தமி ழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார், அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் அடிப்படை பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.  இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ் துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா செயல் அலுவலர் செல்வராஜ்  ஆத்தூர் கிழக்கு ஒன்றிய  செயலாளர் முருகேசன்ராஜ், கலிய மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.