districts

img

இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை

இராமநாதபுரம், பிப்.2- இராமநாதபுரம் நாடா ளுமன்ற உறுப்பினர் நாடா ளுமன்ற மக்களவையில் ராமநாதபுரத்திற்கு விமான நிலையம் எப்போது அமைக்கப்படும்? பக்தர்  களும் சுற்றுலா பயணிகளும் அதிகம் வந்து செல்லும் இட மான இராமநாதபுரத்திற்கு விமான நிலையம் அமைக்க  ஒன்றிய அரசு விரைந்து முன் வருமா? உள்ளிட்ட கேள்வி களை எழுப்பி இருந்தார். நவாஸ் கனி எம்பியின் கேள்விக்கு ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் டாக்டர்  வி.கே.சிங் எழுத்துப்பூர்வ மாக அளித்த பதிலில், ராம நாதபுரத்தில் செயல்பட்டு வரும்  பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான நிலையம் உதான் திட்டத்தின் கீழ் பய ணிகள் விமானங்களும் இயக்க தகுதி வாய்ந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசிடமிருந்து கட்டணம் இன்றி நிலம் மற் றும் இதர தேவைகளை பெற்று ராமநாதபுரத்தில் விமான நிலையம் விரிவாக்  கம் செய்யப்பட்டு இராமநாத புரத்தில் இருந்து சென் னைக்கு விமான சேவை தொடங்கப்படும் என பதில ளித்திருந்தார்.

இதுகுறித்து நவாஸ் கனி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாத புரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பொறுப் பேற்ற நாள் முதலே பல்  வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறேன். தொடர்ந்து பலமுறை நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கோரிக்கையை ஒன்றிய அரசிடம் விடுத்தி ருக்கிறேன். விமான போக்குவரத்து துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்து இருக்கிறேன். இராமநாதபுரம் மாவட் டம் நாடு முழுவதும் பல் வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் மாவட்டமாக இருக்கின்றது, எனவே  இங்கு விமான நிலையம் அவ சியம் என்பதை சுட்டிக்காட்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்த நிலையில்  இன்று நாடாளுமன்ற மக் களவையில் நான் எழுப்பிய  ராமநாதபுரம் விமான நிலை யம் குறித்த கேள்விக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இராம நாதபுரத்தில் இருந்து சென் னைக்கு விமான சேவை துவங்குவது குறித்து பதில்  அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து ஒன்றிய அரசையும் மாநில அரசை யும் அணுகி விரைந்து விமான நிலையம் அமைக்கப்பட்டு விமான சேவை தொடர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று தெரி வித்துள்ளார்.

;