districts

img

தேனி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வர் முத்து சித்ரா

தேனி, அக்.7- தேனி அரசு மருத்துவக் கல்  லூரி மருத்துவமனை புதிய முதல்வராக மருத்துவர் முத்து  சித்ரா திங்களன்று பதவியேற்றார். தேனி அரசு மருத்துவக் கல்  லூரி மருத்துவமனையில் முதல்வ ராக பணியாற்றிய மருத்துவர் பால சங்கர் கடந்த இரண்டு மாதங்க ளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார்.  இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் முதல்வராக டாக்டர் முத்துசித்ராவை நிய மித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை யடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின் முதல்வராக டாக்டர் முத்து சித்ரா திங்களன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி பேரா சிரியர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரி வித்தனர். மருத்துவர் முத்துசித்ராவின் சொந்த ஊர் திரு நெல்வேலி ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறையின் பேராசி ரியராக பணியாற்றியுள்ளார்.