அவிநாசி, பிப்.7– அவிநாசி, கால்நடை மருத்துவமனை அருகே சிறிய குட்டையில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் வாகன ஓட்டிக ளுக்கு சிரமம் ஏற்படுகிறது. அவிநாசி ஒன்றியம் கால்நடை மருத்துவ மனை அருகில் சிறிய குட்டை அமைந்துள் ளது. இக்குட்டையில் டாஸ்மாக் கழிவு குப் பைகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர் களால் கொட்டப்படும் குப்பைகளுக்கு பகல் நேரத்தில் தீ வைத்து விடுகின்றனர். இதிலி ருந்து வரும் தீப்புகையினால் வாகன ஓட்டி கள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகிறது. ஆகவே, உடனடியாக பேரூ ராட்சி நிர்வாகம் குட்டையில் உள்ள குப்பை களை அப்புறப்படுத்தி குட்டையினை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.