districts

img

தேனி மாவட்டத்தில் ஆயிரம் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கல்

தேனி, நவ.27- சமூகநலன்- மகளிர் உரி மைத்துறையின் மூலம் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து,  மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியர்களுக்கும், மாதம்  ஆயிரம் ரூபாய் வழங்கும் புது மைப் பெண் திட்டம் (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்)  தமிழ்  நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களால்   துவக்கி வைக்  கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.   இத்திட்டத்தின் மூலம்  பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.  பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதா யத்தை உருவாக்க வழிவகை செய்தல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தேனி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ்  (மூவலூர் இராமாமிர்தம் அம் மையார் உயர்கல்வி உறுதி  திட்டம்) அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் பயிலும் 193 மாணவியர்களுக்கும், பொறியியல் கல்லூரிகளில் பயி லும் 18 மாணவியர்களுக்கும், மருத்துவ கல்லூரிகளில் பயி லும் 33 மாணவியர்களுக்கும், அரசு சட்டக்கல்லூரியில் பயி லும் 7 மாணவியர்களுக்கும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 30 மாணவியர்களுக்கும், அரசு உதவிபெறும் கல்லூரி கள் மற்றும் தனியார் கல்லூரி களில் கலை மற்றும் அறிவியல் பயிலும் 559 மாணவியர்களுக் கும், பொறியியல் கல்லூரி களில் பயிலும் 53 மாணவி யர்களுக்கும், செவிலியர் பயிற்சி கல்லூரிகளில் பயிலும் 58 மாணவியர்களுக்கும், வேளாண்மை கல்லூரிகளில் பயிலும் 13 மாணவியர்களுக் கும், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறு வனத்தில் பயிலும் 3 மாணவி யர்களுக்கும், தொழில் நுட்பக் கல்லூரிகளில் பயிலும் 23  மாணவியர்களுக்கும் என  மொத்தம் அரசு கல்லூரிகளில் பயிலும் 281 மாணவியர்களுக் கும், அரசு உதவி பெறும் கல்லூ ரிகள் மற்றும் தனியார் கல்லூரி களில் பயிலும் 709 மாணவி யர்களுக்கும் ஆக மொத்தம் 990 மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  

இத்திட்டத்தால் பயன்பெற்ற பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி -ஆராய்ச்சி நிலை யத்தில் படித்து வரும் மாணவி சுபா தெரிவிக்கையில்,  எனது  தந்தையின் வருமானம் குடும் பத்தினை பராமரிப்பதற்கே போதுமானதாக இல்லை. எனது படிப்பிற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலை யில் படித்து வருகிறேன். இந்த நிலையில்  முதலமைச்சர் அவர்கள் புதுமைப் பெண் திட்டத்தினை செயல்படுத்தி வரு வதன் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டு, எனது உயர் கல்  விக்கு தேவையான உபகர ணங்கள் வாங்குவதற்கு எளி தாக உள்ளது. மேலும், இதன்  மூலம் உயர் கல்வி பயில்வ தற்கு ஊக்கம் அளித்து வரு கிறது. எங்களைப் போன்ற ஏழை, எளிய மாணவியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, புதுமைப் பெண் திட்டத்தினை செயல்படுத்தி தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக திகழ்ந்து வருகின்ற முதல மைச்சருக்கு  எங்களது குடும்  பத்தினரின் சார்பாக நெஞ் சார்ந்த நன்றியினை தெரிவித் கொள்கிறேன் என்று கூறினார்.  இத்தகவலை தேனி மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் சு.ஜெகவீரபாண்டியன்,   உதவி மக்கள் தொடர்பு அலு வலர் (செய்தி) நா.விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

;