districts

img

சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பி.மூர்த்தி வாக்குச்சேகரிப்பு

மதுரை, பிப்.18-  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் 96-ஆவது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் என்.விஜயாவுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு வணிகவரி- பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஹார்விபட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.ராம கிருஷ்ணன், எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.முத்துராஜ், திருப்பரங்குன்றம் தாலுகாச் செயலாளர் எம்.ஜெயகுமார், தாலுகாக் குழு உறுப்பினர்கள் பி.ஈஸ்வரி, சி.பாண்டியன், எஸ்.எம்.பாண்டி, திமுக சார்பில் மாரியப்பன், இளங்குமரன், பாலாஜி, செந்தில், காங்கிரஸ் வெங்கிடு, அண்ணாமலை, மதிமுக கிருஷ்ணசாமி, செல்வரங்கன் உட்பட கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.