சாலை விபத்தில் இருவர் பலி
சாத்துர், ஜூன் 6- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (70). அதே பகுதியைச் சேர்ந்தவர் சோலைச்சாமி (45). இருவ ரும், இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் சென்றனர். நள்ளி அருகே வந்த போது, நாகர்கோவிலி ருந்து-ஒசூர் நோக்கிச் சென்ற கார் இருசக்கர வாக னத்தின் பின்னால் மோதி யது. இதில் இருசக்கர வாக னத்தில் சென்ற சந்திரசேகர், சோலைச்சாமி ஆகிய இரு வரும் பலத்த காயமைடந்த னர். இதில், சோலைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். மேலும் சந்திரசேகர் கோவில்பட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டு, மேல் சிகிச்சைக் காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரி ழந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டி ஓபிஎஸ் சொந்த ஊரில் ஒட்டியதால் பரபரப்பு
தேனி, ஜூன் 6- அதிமுக பொதுச் செயலா ளராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்துகிறோம் என்று வாச கங்கள் அடங்கிய சுவரொட்டி கள் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் ஒட்டியதால் அதிமுக வட்டாரத்தில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப் பாளராக ஓ.பன்னீர்செல் வம், இணை ஒருங்கிணைப்பா ளராக எடப்பாடி பழனிச் சாமி இருந்து வரும் நிலை யில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறை வுக்குப் பின்பு தொடர்ந்து அதி முகவின் தலைமை குறித்த பிரச்சனை அவ்வப்போது எழுந்து வருகிறது. தற்பொ ழுது அதிமுகவின் ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர்செல் வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அதிமுகவின் தலைமை குறித்த போஸ்டர் ஒட்டப்பட் டுள்ளது. பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் செல்லும் சாலை மற்றும் ஓ.பன்னீர் செல்வத் தின் மகனும் தேனி நாடாளு மன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்தி ரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் அதி முகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் அடங் கிய சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி களால் பெரியகுளம் பகுதி யில் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பளுதூக்கியவர் மாரடைப்பால் உயிரிழப்பு
மதுரை, ஜூன் 6- மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (27) இவர் தினமும் வீட்டின் அருகே இருக்கக்கூடிய ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கம். இவர் ஞாயிறன்று உடற்பயிற்சிக்கு சென்றபோது அதிக எடை கொண்ட பயிற்சியை மேற் கொண்டு உள்ளார், அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார், அவரை மீட்ட சக நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலை யில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இருடியம் மோசடி: 3 பேர் கைது
மதுரை, ஜூன் 6- மதுரை மாவட்டம் அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த வர் பிரபு. இவர் கொடைக்கானலில் பிரபல தனியார் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இவரைத் தொடர்பு கொண்ட திண்டுக்கல் மாவட்டத் தைச் சேர்ந்த பாலமாயன், மணிகண்டன் மற்றும் ஜெய ராஜ் ஆகியோர் தங்களிடம் அரியவகை இருடியம் இருப்ப தாக கூறி ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட பிரபு, மதுரை ஊமச்சிக்குளம் காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். விசா ரணை நடைபெற்று வருகிறது.